பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருநாவுக்கரசு நாயனார் புராணம் 267

கவள மாகளிற் றின் உரி போர்த்தவர் தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர். திவள வானவர் போற்றித் திசைதொழும் பவள மேனியர் பாலைத் துறையரே. * : திருநல்லூர் : இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் பெரியாண்டேசுவரர், கலியான சுந்தரேசுவரர் என்பவை . அம்பிகையின் திருநாமங்கள் திரிபுர சுந்தரி அம்மை, கலியான சுந்தரி என்பவை. இது சுந்தரப் பெருமாள்

கோயில் என்ற ஊருக்குத் தெற்குத் திசையில் இரண்டு மைல் துாரத்தில் உள்ளது. கலியான சுந்தரேசுவரர் திருநாவுக்கரக நாயனாருக்குத் தம்முடைய திருவடிகளைச் சூட்டிய ருளிய தலம் இது. இந்தச் செய்தியை அந்த நாயனார் பாடிய ருளிய ஒரு திருத்தாண்-கத்தால் அறியலாம். அத்தத் திருத் தாண்டகம் வருமாறு: . -

"உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்;

உயிர்வைத்தார்; உயிர்செல்லும் கதிகள் வைத்தார்; மற்றமரர் கணம்வைத்தார்; அமரர் கானா

மறைவைத்தார்; குறைமதியம் வளர வைத்தார்; செற்றம்மலி ஆர்வமொடு காம லோபம் -

சிறவாத நெறிவைத்தார். துறவி வைத்தார்; நற்றவர்சேர் திருவடிஎன் தலைமேல் வைத்தார்,

நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.” இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருவிருத்தம் வருமாறு: - .. - படவேர் அரவல்குற் பாவைதல்

லீர்பக லேஒருவர் இடுவாரிடைப்பலி கொள்பவர் - போலவத் தில்புகுந்து