பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 269.

கலியான சுந்தரேசுவரருடைய சந்நிதி மலையைப் போல உயர்ந்த ஒரிடத்தில் உள்ளது. திருக்கோயிலுக்கு எதிரில் சப்த சாகர தீர்த்தம் என்னும் தீர்த்தம் உள்ளது. கலியாண சுந்தரேசுவரர் பொன்வண்ணத் திருமேனியை உடையவராக விளங்குகிறார். இவர் ஒவ்வொரு நாளும் ஐந்து நிறம் உள்ளவராகக் காட்சி அளித்தருளுகிறார் என்று ஆன்றோர் கூறுவர். சிவலிங்கப் பெருமானிடத்தில் சில துளைகள் காணப்படுகின்றன. அகத்திய முனிவருக்குத் திருமணக் காட்சி வழங்கியருளிய தலம் இது. அந்த முனிவர் பிரதிஷ்டை செய்தருளிய அகத்திய விங்கம் கலியான சுந்த ரேசுவரருக்கு அருகில் உள்ளது. இந்தத் திருக்கோயிலில் சாளக் கிராமத்தினால் செய்த முருகப் பெருமானுடைய திரு. அருவம் இருக்கிறது. இந்தத் தலத்தில் சப்தஸ்தானத் திரு விழா நடை பெற்று வருகிறது. அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடியருளிய மற்றொரு திருத்தொண் உகம் வருமாறு: - . . *

பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல்வைத்தார்;

புலியுரியின் அதன்வைத்தார்; புனலும் வைத்தார்; மன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்; வார்காதிற் குழைவைத்தார்; மதியம் வைத்தார்; மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்;

வேழத்தின் உரிவைத்தார்; வெண்ணுரல் வைத்தார்; நன்னலத்த திருவடிஎன் லைமேல் வைத்தார்

நல்லூர் எம் பெருமானார் நல்ல வாறே. . இந்தத் தலத்தைப் பற்றித் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் குறிஞ்சி பண்ணிலும், காந்தாரப் பண்ணிலும், சாதாரிப் பண்ணிலும் திருப்பதிகங்களைப் பாடியருளியிருக் கிறார். அவற்றுள் குறிஞ்சிப் பணில் அமைந்த பாசுரம் ஒன்று வருமாறு: . . . . . . . . . . . -

கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானைக்