பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவு க்கரசு நாயனார் புராணம் 271:

அன்னியர் அற்றலர் அங்கண

னே அருள் நல்கென்பரே.’’ அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடி பருளிய ஒரு திருத் தாண்டகம் வருமாறு:

குலம்கிளரும் வருதிரைகள் ஏழும் வைத்தார்:

குருமணிசேர் மலைவைத்தார்; மலையைக் கையால் உலம்கிளர எடுத்தவன்தோள் முடியும் நோவ

ஒருவிரலால் உறவைத்தார்; இறைவா என்று புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்;

புகழ்வைத்தார்; புரிந்தாளாக் கொள்ள வைத்தார்: நலம்கிளரும் திருவடிஎன் தலைமேல் வைத்தார் -

நல்லூர் எம் பெருமானார் நல்ல வாறே.' பிறகு உள்ள 199-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தம்மை அடிமையாக உடைய தலைவனாகிய கலியாணசுந்தரேசுவரன் வழங்கிய திருவருளைப் பெற்றுக் கொண்டு அந்தத் திருநல்லூரை விட்டு விட்டு நீங்கி எழுந்தருளி வாளை மீன்கள் துள்ளிப் பாயும் நீர் பாயும் வயல்களைப் பெற்ற திருப்பழனத்தின் பக்கத்தை அந்த நாயனார் அடைந்து திருமால் பள்ளி கொண்டருளிய பாற்கடலில் எழுந்த நீலநிறத்தைப் பெற்ற ஆலகாலவிடத்தை விழுங்கி இருட்டைப் போலக் கருமை நிறத்தை அடைந்த திருக்கழுத்தைப் பெற்றவரும், பாம்பு க்ளாகிய அணிகலன்களைப் புனைந்து கொண்டு நீண்ட இரவு நேரத்தில் திருநடனம் புரிந்தருள்பவராகிய ஆபத்சகாயேசுவரருடைய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளைப் பணியும் பாக்கியத்தை நேரில் அந்த நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு: * - . . .

" ஆளுடைய நாயகன்றன்

அருள்பெற்றங் ககன்றுபோய் வாளைபாய் புனற்பழனத்

திருப்பழன மருங்கணைந்து