பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 - - பெரிய புராண விளக்கம்-6

காளவிடம் உண்டிருண்ட

கண்டர்பணிக் கலன்பூண்டு ளிேரவில் ஆடுவார்

கழல்வணங்க கேர்பெற்றார்.”

ஆளுடைய-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தம்மை அடிமையாக உ ைட ய. நாயகன்றன்-தலைவனாகிய கலியாண சுந்தரேசுவரன். தன்:அசைநிலை. அருள்-வழங்கிய திருவருளை. பெற்று-பெற்றுக்கொண்டு. அங்கு-அந்தத் திருநல்லூரை, அகன்று-விட்டு விட்டு நீங்கி. போய்-மேலே எழுந்தருளி, வாளை-வாளை மீன்கள்; ஒருமை பன்மை மயக்கம். பாய்-தாவிக் குதிக்கும். புனல்-நீர் பாயும். பழனவயல்களைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. திருப்பழன-திருப்பழனத்தினுடைய. மருங்கு-பக்கத்தை. அணைந்து-அந்த நாயனார் அடைந்து. காளவிடம்-திருமால் பள்ளிகொண்டருளிய பாற்கடலில் எழுந்த நீலநிறத்தைப் பெற்ற ஆலகால விடத்தை. உண்டு-விழுங்கி. இருண்டஇருட்டைப் போலக் கருமை நிறத்தை அடைந்த கண்டர்திருக்கழுத்தைப் பெற்றவரும். பணி-பாம்புகளாகிய: ஒருமை பன்மை மயக்கம். க்சந்தி. கலன்-அணிகலன்களை ஒருமை பன்மை மயக்கம். பூண்டு-புனைந்து கொண்டு. நீள்-நீண்ட. இரவில்-தள்ளிரவு நேரத்தில். ஆடுவார்-திருநடனம் புரிந் தருள்பவராகிய ஆபத்சகாயேசுவரருடைய. கழல்-வெற்றிக் கழலைப் பூண்டிருக்கும் திருவடிகளை; ஆகுபெயர். வணங்கபணியும் பாக்கியத்தை; வினையாலணையும் பெயர். நேர்

தமக்கு நேரில். பெற்றார்-அந்த நாயனார் அடைந்தார்.

திருப்பழனம்.இது சோழநாட்டில் காவிரியாற்றினுடைய கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப் பவர் ஆபத்சகாயேசுவரர். அம்பிகை பெரியநாயகிஅம்மை. இது திருவையாற்றுக்குக் கிழக்குத் திசையில் இரண்டு மைல் தூரத்தில் உள்ளது. இது சப்தஸ்தானத் தலங்களில் இரண்

டாவது தலம். * . . . . . . . . ': “... # , -