பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 273

" வஞ்சித்தென் வளைகவர்ந்தான்

வாரானே ஆயிடினும் பஞ்சிக்காற் சிறகன்னம்

பரந்தார்க்கும் பழனத்தான் அஞ்சிப்போய்க் கவிதலிய

கழலோம்பும் அப்பூதி குஞ்சிப்பூ வாய்நின்ற - சேவடியாய் கோடியையே.' என்று அப்பூதியடிகள் நாயனாருடைய அடிமைத்திறத் தைத் திருநாவுக்கரசு நாயனார் பாராட்டிப் பாடியருளியிருக் கிறார். இந்தத் திருக்கோயிலில் வேணுகோபாலப் பெருமாள் என்னும் திருமாலினுடைய சந்நிதி உள்ளது. இந்தச் சிவத் தலத்தில் வாழை மரங்கள் சிறப்பாக வளர்ந்து நிற்கும். ஆதலால் இந்தத் தலத்திற்குக் கதவிவனம் என்ற பெயர் அமைந்தது. இதற்கு அருகில் உள்ள திங்களுரில் அப்பூதியடி தள் நாயனாருடைய புதல்வன் பாம்பின் நஞ்சினால் இறந்து போக திருநாவுக்கரசு நாயனார்,

  • ’ ஒன்றுகொ லாமார் சிந்தை உயர்வரை ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.” என்று இந்தளப்பண்ணில அமைந்த பாசுரம் முதல் ஒவ்வொரு பாசுரத்திலும் இரண்டு முதல் பத்து வரையில் எண்கள் அமையுமாறு பாடியருளி இறந்து போன அந்தச் சிறுவனை மீண்டும் உயிர்பெற்று எழுமாறு செய்தருளினார். அந்தத் திருப்பதிகத்தில் வரும் இறுதிப் பாசுரம் வருமாறு:

பத்துக் கொலாம்.அவர் பாம்பின்கண் பாம்பின்பல் பத்துக் கொலாமெயி றும்தெரிந் துக்கன பத்துக் கொல்ாம்அவர் காயப்பட் டான்தலை பத்துக் கொலாம்அடி பார்செ பசைதானே."

தி-24