பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பெரிய புராண விளக்கம்-6.

திங்களுர் சந்திரன் வழிபட்ட தலம். சந்திரனுடைய இரணங்கள் பங்குனி மாதத்திலும் புரட்டாசி மாதத்திலும் பெளர்ணமியிலும் அதற்கு முன்னும் பின்னும் உள்ள இரண்டு: தினங்களிலும் சிவபெருமான்மேற் படுகின்றதாக ஆன்றோர் கூறுவர். இந்தத் தலத்தைப் பற்றித் தக்கேசிப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

. வேதம் ஓதி வெண்ணுால்பூண்டு வெள்ளை எருதேறிப் பூதம் குழப் பொலிய வருவார் புலியின் உரிதோபார் நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே." இந்தத் தலத்தைப் பற்றிப் பழந்தக்கராகப் பண்ணில் ஒரு இருப்திகத்தையும், திருநேரிசை, திருவிருத்தம்.திருக் குறுந்: தொகை, திருத்தாண்டகம் என்பவை அடங்கிய திருப்பதிகங் களையும் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளியிருக்கிறார். அவற்றுள் பதிந் தக்கராகப் பண் அமைந்த ஒரு பாசுரம். வருமாறு: . ، سي

சொன் மாலை பயில்கின்ற

குயிலினங்காள் சொல்லிரே பன்மாலை வரிவண்டு

பண்மிழற்றும் பழனத்தான் முன்மாலை நகுதிங்கள் . முகிழ்விளங்கு முடிச்சென்னிப் பொன் பாலை மார்பன் என்

புதுநலமுண் டிகழ்வானோ' அவர் பாடியருளிய திருநேரிசை ஒன்று வருமாறு:

ஆடினார் ஒருவர் போலும் . அலர்கமழ் குழலி னாளைக் கூடினார் ஒருவர் போலும் - குளிர்புனல் வளைந்த திங்கள்