பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 39

திலகவதியாருக்குப் பிறகு, மலரும்-மலர்ச்சியைப் பெற்று விளங்கும். மருணிக்கியார்-மருள் நீக்கியார் என்பவர். வத்து. திருவாய்மூருக்கு வந்து. அவதாரம் செய்தார்-திருவவதாரம் சேய்தருளினார். +. - • , ‘. பிறகு வரும் 19-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: மாதினியார் என்னும் பெண்மணியாருடைய அழகிய வயிற்றில் திருவாய்மூரில் நிலை பெற்றுவிளங்கிய சீர்த்தியைப் பெற்ற புகழனாருடைய புதல்வராகிய அந்த மருணிக்கியார் திருவவதாரம் செய்தருளியதற்குப் பிறகு செய்ய வேண்டிய கடமைகளாகிய முறைமைப்படி உள்ள மங்கலக் காரியங்க ளாகிய மேம்பாட்டையும் தகுதியையும் பெற்ற நல்ல செயல்கள் சிறப்பாக அமைய தாங்கள் விழைந்த மற்ற மக்கள் பாராட்டும் பாராட்டுதல்களோடு குற்றம் இல்லாத பல உறவினர்களும் வாழ்த்துமாறு அந்த மருணிக்கியார் இளங் குழந்தைப் பருவத்தைக் கடந்தருளினார். பாடல் வருமாறு: * மாதினியார் திருவயிற்றில் -

மன்னியசீர்ப் புகழனார் காதலனார் உதித்ததற்பின்

கடன்முறைமை மங்கலங்கள் மேதகுநல் வினைசிறப்ப

விரும்பியபா ராட்டினுடன் ஏதமில்பல் கிளைபோற்ற - இளங்குழலிப் பதம்கடந்தார்.’’ மாதினியார்-புகழனாருடைய பத்தினியாராகிய் மாதினி யாருடைய திருவயிற்றில்-அழகிய வயிற்றிலிருந்து உருபு மயக்கம். மன்னிய-திருவாய்மூரில் நிலை பெற்று விளங்கிய சீர்-சீர்த்தியைப் பெற்ற, ப்:சந்தி. புகழனார்-மாதினியாரு டைய கணவராகிய புகழனாருக்கு. காதலனார்-புதல்வராகிய மருணிக்கியார். உதித்ததற்பின்-திருவவதாரம் செய்தருளி யதற்குப் பிறகு. கடன் செய்யவேண்டிங் கடமைகளாகிய ஒருமை பன்மை மயக்கம். முறைமை-முறைப்புடி. மங்கலங்