பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பெரிய புராண விளக்கம்-5

கள் மங்கலமாகிய காரியங்களாகிய. அவையாவன: குடுமி வைத்தல், பள்ளிக்கு அனுப்பப் பூசை போடுதல் முதலியவை. மேதகு-மேம்பாட்டையும் தகுதியையும் பெற்ற. நல்-நல்ல. வினை-செயல்கள்; ஒருமை பன்மை மயக்கம்.சிறப்ப-சிறப்பாக அமைய, விரும்பிய-தாங்கள் விழைந்த பாராட்டினுடன். அந்தத் திருவாய்மூரில் வாழும் மக்கள் பாராட்டிக் கூறும் பாராட்டுதல்களோடு; ஒருமை பன்மை மயக்கம். ஏதம்குற்றம்: "துன்பம்' எனலும் ஆம். இல்-இல்லாத கடைக் குறை. பல்-பல. கிளை-உறவினர்கள்; திணை மயக்கம். போற்ற-வாழ்த்துக்களைக் கூறுமாறு. இளங்குழலி-இளங் குழந்தை. ப்:சந்தி. பதம்கடந்தார்-பருவத்தைக் கடந்தருளி னார். - -

- பிறகு உள்ள 20-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்த மருணிக்கியாருடைய தலையில் உள்ள மயிர் களை அகற்றும் குடுமி வைத்தலாகிய திருமணச் செயலை யும் தெளிந்த அறிவைப் பெற்றவர்களும், திருவாய்மூரில் வாழ்பவர்களும் ஆகிய பல மனிதர்கள் எல்லாரு மகிழ்ச்சி யில் சிறந்து விளங்கவும் அந்தச் செயலைச் செய்ததற்குப் பிறகு நிதியத்தை வெள்ளத்தைப் போல அந்த மக்கள் பெற்றுக்கொள்ளுமாறு வழங்கி தம்முடைய மெய், வாய், கண்கள், காதுகள், முக்கு என்னும் ஐந்து இந்திரியங்களும் பெறுபவையாகிய தம்முடைய திருவுள்ளத்தில் அரும்பிய சுருண்ட அறியாமையைப் போக்கிவிட்டு மலருமாறு புரிவிக்கும் அறுபத்து நான்கு கலைகளைக் கற்றுப் பழகும் வண்ணம் ஆரம்பித்து வைத்தார்கள். பாடல் வருமாறு:

மருணிக்கியார்சென்னி

மயிர்நீக்கும் மணவினையும் தெருணிர்ப்பன் மாந்தரெலாம்

மகிழ்சிறப்பச் செய்ததற்பின் பொருணித்தம் கொளவீசிப்

அன்ைகொளுவ மனம்முகிழ்த்த