பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4: பெரிய புராண விளக்கம்-6

குலம் பொடிப்ப ஆர்த்து.', சிங்கம் அன்ன போர்த் தலை வரில் தலைவராய்த் தெரிந்தார்.' (படைத் தலைவர் வதைப் படலம், 30, 51), தேர்வரு சிங்கமும் நடுக்குற.", 'வீரச் சிங்கம் அன்னவர்.” சிங்க வேறென்ன இலக்குவவ.", 'அரிகுலம் அன்ன நீலன், அங்கதன், குமுதன் சாம்பன் .', "அரிகுல வீரர்.', 'சிங்க வேறிடியுண்டென நெடு நிலம் சேர்ந்தான்.' (பிரமாத்திரப் படலம், 47, 69,79, 121, 154, 176), சிங்க வேறனைய வீரன் செறி கழற் பாதம் சேர்ந்தான்." (மாயா சீதைப் படலம், 56), 'ஆளி போன்றுளன்." (வேலேற்ற படலம், 17), வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க. (இராவணன் வதைப் படலம், 201), சிங்க வேறனையான் செய்ய திருமுடியாட் டும் புன்னீர்.” (திருமுடி சூட்டுப் படலம், 35) என்று கம்ப ரும் பாடியவற்றையும், சினச் சிங்கம் என எழுந்து." (இலவணன் வதைப் படலம், 104), ஆளியனார் தம் ஆருயிர் கொள்வார். (அசுவமேத யாகப் படலம் 37), *வெங்கண் மதகரி நிரைகள் மிக்கவுள வேணும், சிங்க விளங் குருளையொடு சென்று செருச்செயுமோ, இங்கிவர்கள் இனையரென இகழல்.” (கந்திருவர் வதைப் படலம், 46) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றையும் காண்க.

பிறகு வரும் 24-ஆம் கவியின் கருத்து வருமாறு: "தெய்வப் பெண்ணைப் போன்ற திலகவதியாரை அந்தத் திருவாய்மூரில் அந்தக் கலிப்பகையாருக்கு திருமணத் துக்கு உரிய கன்னிகையாகும் பொருட்டுப்பேசி வந்த சான் றோர்களும் தாங்கள் வந்ததற்கு உரிய காரணத்தைத் தெரியப் ப டு த் த அந்தக் கன்னிகையினுடைய நல்ல பண்பு களை எடுத்துக் கூறி அவள் பிறந்த குலத்தையும் எடுத்துச் சொல்லி ஒரு குற்றமும் இல்லாத சீர்த்தியைப் பெற்ற, புகழனார் படத்தைக் கொண்ட பாம்பைப் போல அகன்ற பெண்குறியைப் பெற்ற பசுமையான வளைகளைத் தன்னு: டைய கைகளில் அணிந்தவளாகிய அந்தத் திலகவதியை