பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - - 45

  • ஆண்டகைமைத் தொழிலின்கண்

அடலரியே றெனஉள்ளார், காண்டகைய பெருவனப்பிற்.

கலிப்பகையார் எனும்பெயரார், பூண்டகொடைப் புகழனார்

பாற்பொருவில் மகட்கொள்ள வேண்டிஎழும் காதலினால் >

மேலோரைச் செலவிட்டார்.” . ஆண்டகைமை-வீரர்களினுடைய தகுதியாகிய பான்மை, யைப் பெற்ற வீரமாகிய, த்:சந்தி. தொழிலின் கண்-வேலை. களில்,ஒருமை பன்மை மயக்கம். அடல்-வலிமையைப் பெற்ற, "கொலை புரிதலைப் பெற்ற' எனலும் ஆம். அரியேறு-ஆண் சிங்கம். என-என்று கூறுமாறு: இடைக்குறை. உள்ளார். இருக்கிறவர். காண்டகைய-யாவரும் பார்க்கும் தகுதியைப் பெற்ற. பெரு-பெருமையைக் கொண்ட வனப்பில்-அழ, கோடு, உருபு மயக்கம். கவிப்பகையார்-விளங்கும் கலிப்பகை யார். எனும்-என்னும்: இடைக்குறை. பெயரார்-திரு. நாம்த்தை உடையவர். பூண்ட-அணிகலனைப் போல மேற் கொண்ட். கொடை-கொடுப்பதில் வல்லவராகிய ஆகு பெயர். ப்:சந்தி. புகழனார்பால் - மருணிக்கியாருடைய தந்தையாராகிய புகழனாரிடத்தில். பொரு-ஒப்பு. இல்-இல் லாத கடைக்குறை. மகள்-அவருடைய புதல்வியாகிய திலக. வதியை. கொள்ள-திருமணத்துக்கு உரிய கன்னிகையாகப் பெற வேண்டி-விரும்பி. எழும்-தம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி எழும். காதலினால்-விருப்பத்தால். மேலோரைமேன்மையாகிய நற்பண்புகளைப் பெற்ற சான்றோர்களை ஒருமை பன்மை மயக்கம். ச்:சந்தி. செல-புகழனாருடைய, - திருமாளிகைக்குப் போகுமாறு இடைக்குறை. விட்டார். அனுப்பினார்.

வீரருக்குச் சிங்கம் உவமை, எழிலார் இராசசிங் கத்தை.","ஏறொப்பானை", சாவா முவாச் சிங்கமே."