பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

இதுவரை இந்நூலின் ஆறு பகுதிகள் வெளி வந்துள்ளன. தமிழ் மக்கள் இந்நூலைப் பெரிதும் வரவேற்கிறார்கள் என்பதைக் காணும்போது எங்களது உள்ளம் பேருவகை கொள்கிறது. அந்நாளில் கம்பராமாயணத்துக்குத் தெளிவுரை எழுதிய வை.மு. கோபால கிருஷ்ணம்ாச்சாரியாரை யும், இந்நாளில் பெரிய புராணத்திற்கு விளக்கவுரை எழுதிய கி. வா. ஜகந்நாதன் அவர்களையும் தமிழ் மக்கள் என்றென்றும் போற்றுவார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இந்நூலில் (ஆறாவது பகுதியில்) திருநாவுக்கரசு நாயனார், அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்து அவருடைய விட்டில் உணவருந்திவிட்டுச் செல்வது வரையிலும் அடங்கியுள்ளது. மேலும் திருநாவுக் கரசு நாயனாரும், அப்பூதியடிகளும், சென்று வழி பட்ட சிவத்தலங்கள் அவர் இயற்றிய பாசுரங்கள் எல்லாம். அடுத்த பகுதிகளில் வருவதைக் காணலாம்.

一 பதிப்பகத்தார்.

குறிப்பு: இப்பகுதியில் பக்க எண் 324க்குப் பிறகு 225 என தப்பாக அச்சாகியுள்ளது. அதை 325 என்று வாசகர்கள் தவனத்திலிருத்தி மேற் கொண்டு தொடர்பாகப் படிக்க வேண்டுகிறோம். இந்தத் தப்பு புத்தகத்தின் கண்ட்சி பாரத்தில் சரி செய்யப்பட்டுள்ளது. மற்றபடி

தொடர்ச்சி சரியாக உள்ளது.