பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 51:

துப் போர் புரிய அவர்களுக்கு மேல் அவர்களுக்கு அந்த 'மன்னன் விடைகொடுத்து அனுப்பினான்; அந்த யுத்தமாகிய, செயலை மெற்கொண்டு அவர் புறப்பட்டுப் போனார். பாடல் வருமாறு: -

கன்னிதிருத் தந்தையார் - மணம்இசைவு கலிப்பகையார்

முன்அணைந்தார் அறிவிப்பு

வதுவைவினை முடிப்பதன்முன் மன்னவற்கு வடபுலத்தோர்

மாறேற்க மற்றவர்மேல் அன்னவர்க்குவிடை கொடுத்தான்;

அவ்வினைமேல் அவர் அகன்றார்." கன்னி-அந்தக் கன்னிகையாகிய திலகவதியாருடைய. திரு.செல்வத்தைப் படைத்தவராகிய திணைமயக்கம். த்:சந்தி. தந்தையார்-தகப்பனாராகிய புகழனார். மணம்: அந்தத் திலகவதியைக் கலிப்பகையாருக்குத்திருமணம் செய்து கொடுக்க. இசைவு-சம்மதம் அளித்ததை அறிந்து. கலிப் பகையார்-அந்தக் கலிப்பகையார். முன்-பெண் பேசுவதன் பொருட்டு முன்னால், அணைந்தார்-திலகவதியினுடைய திருமாளிகைக்குச் சென்றவர்களாகிய சான்றோர்கள்: ஒருமை பன்மை மயக்கம். அறிவிப்ப-தெரியப்படுத்த, வதுவை-திருமணமாகிய, வினை-மங்கலச் சடங்கை. முடிப் பதன் முன்-முடிப்பதற்கு முன்பே, மன்னவற்கு-தம்முடைய அரசனுக்காக. வடபுலத்தோர்.வடநாட்டில் வாழும் மக்கள்; ஒருமை பன்மை மயக்கம். மாறு ஏற்க-பகைவர்களாக வந்து, எதிர்த்துப் போர் புரிய மாறு: திணை மயக்கம். மற்று: "அசைநிலை. அவர்மேல்-அந்தப் பகைவர்களுக்கு மேல்;. ஒருமை பன்மை மயக்கம். அன்னவர்க்கு-அந்தக் கலிப்பகை யாருக்கு. விடைகொடுத்தான் - அந்த மன்னன் விடை கொடுத்துப் போருக்கு அனுப்பினான். அவ்வினை-அந்தப்