பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பெரிய புராண விளக்கம்-6

போராகிய செயலை. மேல்-மேற்கொண்டு. அவர்-அந்தக் கலிப்பகையார். அகன்றார்-போர்க்களத்துக்குப் புறப்பட்டுப் போனார். - -

பிறகு வரும் 26-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'அந்த மன்னனுக்குப் போர் எ மு. ந், த சமயத்தில் அத்தொழிலை மேற்கொண்டு கொடுமையாக இருக்கும் யுத்தத்தைப் புரிவதற்காக அந்த மன்னனிடம் விடை யைப் பெற்றுக்கொண்டு போனவராகிய அந்தக் கலிப்பகை யாரும் போர் புரியும் சேனைகளையும் தம்மோடு கூட்டிக் கோண்டு சில தினங்களில் மூண்ட கோபத்தைக் கொண்ட பகைவர்களுடைய நாட்டுக்குச் சென்று அந்தப் பகைவர்க ளோடு சேர்ந்து கடுமையாக இருக்கும் போராகிய சமுத் திரத்தை நீந்துபவராகி நீண்ட தினங்களாக வீரம் நிரம்பிய கொடுமையாக இருக்கும் யுத்தத் துறைகளை மேற் கொண் டார். பாடல் வருமாறு: ' ' .

"வேந்தற்குற் றுழிவினைமேல்

வெஞ்சமத்தில் விடைகொண்டு போந்தவரும் பொருபடையும்

உடன்கொண்டு சிலநாளில் காய்ந்தசினப் பகைப்புலத்தைக் கலந்துகடும் சமர்க்கடலை நீந்துவார் நெடுநாள்கள் " . ^

நிறைவெம்போர்த் துறைவினைத்தார்.' வேந்தற்கு-அந்த மன்னனுக்கு. ஊற்றுழி-போர் எழுந்த சமயத்தில். உற்றுழி-உற்ற உழி: தொகுத்தல் விகாரம். வினை-அந்தத் தொலை. மேல்-தாம் மேற் கொண்டு வெம்-கொடுமையாக இருக்கும். சமத்தில்-யுத்தத்தைப் புரிவதற்காக உருபு மயக்கம். விடை-அந்த மன்னனிடம் விடையை, கொண்டு-பெற்றுக் கொண்டு. போந்தவரும்: சென்றவராகிய அந்தக் கலிப்பகையாரும். பொரு-போர்