பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 49

திருமணம் புரிந்து கொள்வதற்குச் சம்மதித்தார். பாடல் வருமாறு: -

' அணங்கனைய திலகவதி

யார்தம்மை ஆங்கவர்க்கு மணம்பேசி வந்தவரும்

வந்தபடி அறிவிப்பக் குணம்பேசிக் குலம்பேசிக்

கோதில்சீர்ப் புகழனார் பணங்கொளர வகல்அல்குற்

பைங்தொடியை மணம்நேர்ந்தார்.' - அணங்கு-தெய்வலோகத்துப் பெண்ணை. அனையபோன்ற. திலகவதியார் தம்மை-அந்தத் திலகவதியாரை, தம்:அசை நிலை. ஆங்கு-அந்தத் திருவாய்மூரில். அவர்க்கு -அந்தக் கலிப்பகையாருக்கு. மணம்பேசி-திருமணத்துக்கு உரிய கன்னிகையாகும் பொருட்டுப் பேசி. வந்தவரும்-வந்த சான்றோர்களும்; ஒருமை பன்மை மயக்கம். வந்தபடி-தாங் கள் வந்ததற்கு உரிய காரணத்தை. அறிவிப்ப-புகழனா ருக்குத் தெரியப் படுத்த. க்:சந்தி. குணம்-அந்தக் கன்னிகையி னுடைய நல்ல பண்புகளை; ஒரும்ை பன்மை மயக்கம். பேசி -எடுத்துக் கூறி. க்:சந்தி. குலம்-அவள் பிறந்த சாதியையும். பேசி-எடுத்துச் சொல்லி. க்சந்தி. கோது-ஒரு குற்றமும். இல்-இல்லாத கடைக்குறை. சீர்-சீர்த்தியைப் பெற்ற, ப்:சந்தி. புகழனார்-கலிப்பகையாருடைய தந்தையாராகிய புகழனார். பணம்-படத்தை. கொள்-கொண்டிருக்கும். அரவு: -பாம்பைப் போன்ற அகல்-அகலமாகிய, அல்குல்-பெண் குறியைப் பெற்ற பைந்தொடியை-பசுமையான வளைகளைத் தன்னுடைய கைகளில் அணிந்தவளாகிய அந்தத் திலகவ தியை அன்மொழித் தொகை. மணம்-திருமணம் புரிந்து கொள்வதற்கு தேர்ந்தார்-அத்தப் புகழனார் சம்மதித்தார். பணங்கொளரவல்குல்: நாகபணம் திகழ். அல்குல்மல்கு