பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திருநாவுக்கரசு நாயனார் புராணம் . 53

புரிவதற்கு உரிய படையும்-யானை, தேர், குதிரை, காலாட் கள் என்னும் சதுரங்க சேனைகளையும்; ஒருமை பன்மை மயக்கம். உடன்-தம்மோடு. கொண்டு-கூட்டிக் கொண்டு. சில நாளில்-சில தினங்களில்; ஒருமை பன்மை மயக்கம். காய்ந்த-மூண்டிருந்த சின-கோபத்தைக் கொண்ட, ப்:சந்தி. பகை-பகைவர்களினுடைய திணை மயக்கம்; பகைமையைப் பெற்ற பகைவர்களினுடைய. ப்:சந்தி. புலத்தை-நாட்டுக்கு உருபு மயக்கம். க்சந்தி, கலந்து-போய்ச் சேர்ந்து. கடும்-கடு மையாக இருக்கும். சமர்-போராகிய, க்:சந்தி. கடலைசமுத்திரத்தை. நீந்துவார்-நீந்துபவராகி, முற்றெச்சம். நெடு-நீண்ட நாள்கள்-தினங்களாக. நிறை-வீரம் நிரம்பிய. வெம்-கொடுமையாக இருக்கும். போர்-யுத்தத்தினுடைய. த்:சந்தி. துறை-துறைகளை ஒருமை பன்மை மயக்கம். விளைத்தார்-அந்தக் கலிப்பகையார் மேற்கொண்டார்.

பிறகு உள்ள 27-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அத்தகையவாகிய தினங்களுக்கு நடுவில்இந்தத் திருவாய் மூரில் தேவலோகத்தில் வாழும் பெண்மணியைப் போன்ற வளாகிய திலகவதியைப் பெற்றெடுத்த பரிசுத்தமாகிய குலத்தில் பிறந்த புகழனார் பழங்காலம் தொட்டு வரும் யாக்கை நிலையாமை என்பது மேவிய வினைகளினுடைய பயனால் இந்த மண்ணுலகத்தை விட்டு இறந்து போகும் வண்ணம் கெட்டதாகிய மருத்துவர்களால் போக்குவதற்கு அருமையாக இருக்கும் ஒரு நோயினால் வருந்தி தேவலோகத்

திற்குப் போய்ச் சேர்ந்தார். பாடல் வருமாறு:

ஆயகாளிடைஇப்பால்

அணங்கனையாள் தனைப்பயந்த தூயகுலப் புகழனார் . . . தொன்றுதொடு நிலையாமை தி-4 -