பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 55.

னாராகிய அந்தப் புகழனாரோடு போய்ச் சேர்ந்தார். பாடல் வருமாறு: -

" மற்றவர்தாம்:உயிர்ப்ேப

மனைவியார்.மாதினியார் சுற்றமுடன் மக்களையும் துகளாக வேநீத்துப் பெற்றிமையால் உடன்என்றும் பிரியாத உலகெய்தும் கற்புநெறி வழுவாமல்

கணவனா ருடன்சென்றார்.'

மற்று: அசை நிலை. அவர்தாம்-அவ்வாறு அந்தப் புகழ னார். தாம்:அசை நிலை. உயிர்-தம்முடைய உயிரை. நீபப. விட்டு விட்டுத் தேவலோகத்திற்குப் போய்ச் சேர, மனைவி யார்.அவருடைய பத்தினியாராகிய. மாதினியார்-மாதினி யார் என்பவர். சுற்றமுடன் தம்முடைய உறவினர்களோடு; திணை மயக்கம்.மக்களையும்-தம்முடைய புதல்வர்களையும். துகளாகவே-புழுதியைப் போலவே. நீத்து-விட்டு விட்டு. ப்:சந்தி. பெற்றிமையால்-சிறந்த பான்மையினால். உடன் -அந்தப் புகழனாரோடு. என்றும்-எந்தக் காலத்திலும். பிரி யாத உலகு-பிரியாத தேவலோகத்தை. எய்தும்-அடையும். கற்பு-கற்பினுடைய. நெறி-வழியிலிருந்து, வழுவாமல்-தவறா மல். கணவனாருடன்-தம்முடைய கணவனாராகிய அந்தப் புகழனாரோடு. சென்றார்-போய்ச் சேர்ந்தார்.

பிறகு உள்ள 29-ஆம் பாடலின் கருத்து வருமாறு: தம்முடைய தந்தையாராகிய புகழனாரும், தம்மைப் பெற்றெடுத்த அன்னையாராகிய மாதினியாரும் இறந்து போனதற்குப் பிறகு விருப்பத்தைப் பெற்றவராகிய திலகவதி . யாரும் அவருக்குப் பின்னால் திருவவதாரம் செய்தகுளிய பிள்ளையாராகிய மருணிக்கியாரும் தங்களுடைய திருவுள்ளங்