பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 57

புரியத் தாங்கள் அடைந்திருந்த துயரத்திலிருந்து நீங்கிப் பெருமையைப் பெற்ற தேவலோகத்தை அடைந்த அத்தப் புகழனாருக்கும் மாதினியாருக்கும் செய்ய வேண்டிய ஈமக் கடன்களைப் பெருகலாகப் புரிந்தார்கள்; பகைவர்களின் மேல் தம்முடைய அரசனுக்காகப் போரைப் புரியச் செல்லும் கலிப்பகையார் என்பவர் போரைப் புரியும் யுத்த களத்தில் தம்முடைய உயிரை விட்டுப் புகழைப் பெற்றார். பாடல் வருமாறு:

  • ஒருவாறு பெரும்கிளைஞர்

மனம்தேற்றத் துயரொழிந்து பெருவானம் அடைந்தவர்க்குச்

செய்கடன்கள் பெருக்கினார்; மருவார்மேல் மன்னவற்கா

மலையப்போம் கலிப்பகையார் பொருவாரும் போர்க்களத்தில்

உயிர்கொடுத்துப் புகழ்கொண்டார். ஒருவாறு-அந்தத் திலகவதியாரும் மருணிக்கியாரும் ஒரு 。é16笛》岛虚js占。 பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். கிளைஞர்-உறவினர்கள்: ஒருமை பன்மை மயக்கம். மனம். தங்களுடைய திருவுள்ளங்களை: ஒருமை பன்மை மயக்கம். தேற்ற-ஆறுதலை அடையுமாறு புரிய். த்:சந்தி, துயர்-தாங் கள் அடைந்திருந்த துயரத்திலிருந்து ஒழிந்து-நீங்கி. பெருபெருமையைப் பெற்ற வானம்-தேவலோகத்தை. அடைந்த வர்க்கு-அடைந்த அந்தப் புகழனாருக்கும் மாதினியாருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ச்சந்தி. செய்-புரிய வேண்டிய. கடன்கள்-ஈமக் கடன்களை, பெருக்கினார்-பெருகலாகப் புரிந்தார்கள்; ஒருமை புன்மை மயக்கம். மருவார் மேல்பகைவர்களின்மேல்: ஒருமை பன்மை மயக்கம். மன்னவற்கா -தம்முடைய அரசனுக்காக. மலைய-போரைப் புரிவதற்கு. திந். ச்ப்போம்.செல்லும், கலிப்பகையார் பொருவாகும்.