பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பெரிய புராண விளக்கம்-6

கலிப்பகையார் போரைப் புரியும். போர்க்களத்தில்-யுத்த களத்தில். உயிர்-தம்முடைய உயிரை. கொடுத்து-விட்டு விட்டு. ப்:சந்தி. புகழ்-புகழிை. கொண்டார்-பெற்றார்.

அடுத்து உள்ள 31 ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: கொடுமையாக இருக்கும் போர்க்களத்தின் மேல் கலிப் பகையார் தம்முடைய வேலாயுதத்தை ஏந்திய மன்னன் கட்டளையிடச் சென்று அந்தப் போர்க்களத்தில் பகைவர் களைப் போரிட்டு அழித்துவிட்டுத் தேவர்கள் வாழும் தேவ லோகத்தை ஆட்சி புரியும் பொருட்டுத் தம்முடைய கடமை யைச் செய்து நிறைவேற்றிய பெருமைக்கு உரிய மொழி களை அந்தத் திருவாய்மூர் என்னும் சிவத்தலத்தில் வாழும் மக்கள் கூறச் செந்தாமரை மலரின்மேல் விற்றிருக்கும் திரு மகளைப் போன்ற திலகவதியார் கேள்விப்பட்டார். பாடல் வருமாறு: - -

" வெம்முனைமேற் கலிப்பகையார்

வேல்வேந்தன் ஏவப்போய் அம்முனையிற் பகைமுருக்கி .

அமருலகம் ஆள்வதற்குத் தம்முடைய கடன்கழித்த

பெருவார்த்தை தலம்சாற்றச் செம்மலர்மேல் திருவனைய

திலகவதி யார்கேட்டார்.' வெம்-கொடுமையாக இருக்கும். முனைமேல்-போர்க் களத்தின் மேல். கலிப்பகையார்-க்லிப்பகையார் என்பவர். - வேல்-வேலை ஏந்திய வேந்தன்-தம்முடைய மன்னன். ஏவ-கட்டளையிட். ப்:சந்தி, போய்-சென்று. அம்முனை யில்-அந்தப் போர்க்களத்தில், பகை-பகைவர்களை: பகை மையைப் பெற்ற பகைவர்களை: ஒருமை பன்மை மயக்கம். முருக்கி போரிட்டு அழித்துவிட்டு. அமர் உலகம்-தேவர்கள்