பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 59.

வாழும் தேவலோகத்தை, அமரர் என்பது 'அமர்” என நின்றது: குறுக்கல் விகாரம், ஆள்வதற்கு-ஆட்சி புரியும் பொருட்டு த்:சந்தி. தம்முடைய கடன்-தம்முடைய கடமையை. கழித்த செய்து நிறைவேற்றிய. பெருபெருமைக்கு உரிய. வார்த்தை - மொழிகளை ஒருமை பன்மை மயக்கம். தலம்-அந்தத் திருவாய்மூர் என்னும் சிவத் தலத்தில் வாழும் மக்கள்: இடஆகு பெயர். சாற்ற-கூற். -ச்:சந்தி. செம்மலர் மேல்-செந்தாமரை மலரின்மேல், திரு. விற்றிருக்ரும் திருமகளை. அணைய-போன்ற திலகவதி யார்-மருணிக்கியாருடைய தமக்கையாராகிய திலகவதியார். கேட்டார்.கேள்விப்பட்டார். -

பிறகு வரும் 32-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "அடியேனுடைய தந்தையாகிய புகழனாரும், அடியே :னுடைய தாயாகிய மாதினியாரும் அந்தக் கலிப்பகை யாருக்கு அடியேனைத் திருமணம் புரிந்து கொடுக்கச் சம்மதித்தார்கள்; அந்த முறையினால் அந்தக் கலிப்பகை யாருக்கே அடியேன் உரியவள்; ஆகையினால் இந்த அடியே னுடைய உயிர் அந்தக் கலிப்பகையாருடைய உயிருடன் சேரும் வண்ணம் அடியேன் புரிவேன்' என்று துணிந்து கொண்டு இறந்து போக வந்தவராகிய திலகவதியாருடைய இரண்டு திருவடிகளின் மேலும் மருணிக்கியாராகிய அவரு டைய தம்பியார் விழுந்து வணங்கினார். பாடல் வருமாறு,

' எந்தையும் அனையும் அவர்க் -

கெனைக்கொடுக்க இசைந்தார்கள்: அந்தமுறை யால்அவர்க்கே

உரியதுநான் ஆதலினால் இந்தஉயிர் அவருயிரோ

டிசைவிப்பன். எனத்துணிய வந்தவர்தம் அடியிணைம்ேல்

மருணிக்கி யார்விழுந்தார்."