பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பெரிய புராண விளக்கம்-6.

பெற்று இந்த மண்ணுலகத்தில் தம்முடைய புகழைப் பெற்ற வித்தகராக விளங்கி சமண சமயத்தவர்களினுடைய தலை மைப் பதவியில் மேம்பாட்டை அடைந்து திகழ்ந்தார்." பாட்ல் வருமாறு: r

அத்துறையில் மீக்கூரும்

அமைதியினால் அகலிடத்தில் சித்தநிலை அறியாத .

தேரரையும் வாதின்கண் w உய்த்தஉணர் வினில்வென்றே உலகின்கண் ஒளியுடைய வித்தகராய் அமண்சமயத்

தலைமையினில் மேம்பட்டார்.' அத்துறையில்-அந்த மருணிக்கியார் அந்தச் சமண சமயத், துறையில். மீக் கூரும்-மேலாளராகச சிறந்து விளங்கும் மீ: திணை மயக்கம். அமைதியினால்-தம்முடைய அறிவாற். றல் சிறப்பாக அமைந்திருக்கும் இயல்பினால். அகல்-அகல. மாகிய, இடத்தில்-இந்த உலகத்தில், சித்தம்-மக்களுடைய சித்தங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நிலை" நிலையை. அறியாத தெரிந்து கொள்ளத. தேரரையும்பெளத்த சமயத்தவர்களையும்: ஒருமை பன்மை மயக்கம். வாதின்கண்-அவர்களோடு தாம் புரிந்த வாதத்தில். உய்த்தசெலுத்திய உணர்வினில்- தயமுடைய அறிவாற்றலால், உருபு மயக்கம். வென்று-வெற்றியைப் பெற்று. ஏ:அசைப் நிலை, உலகின்கண்-இந்த மண் உலகத்தில்.’ ஒளி-வாழும் மக்கள் பாராட்டும் புகழை. உடைய-பெற்ற வித்தகராய்வித்தைகளில் வல்லவராகி. அமண்-சமணர்களினுடைய திணை மயக்கம். சமய-சமயத்தினுடைய. த்:சந்தி. தலை மையினின் தலைமைப் பதவியில் மேம்பட்டார்-மேம், பாட்டை அடைந்து திகழ்ந்தார்.

அடுத்துவரும் 4 ஆம்பாடலின் கருத்து வருமாறு: