பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 75

திருவதிகை வீரட்டானத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி -யிருந்த சிவந்த பவள மலையைப் போன்றவராகிய வீரட்டே சுவரருடைய திருவடிகளை வணங்கி குற்றம் இல்லாத சிவ சின்னங்களாகிய திருநீறு, உருத்திராக்க மாலை, சடாபாரம். ஆகியவற்றை அந்த நாள் முதலாகத் தரித்துக் கொண்டு பேராவல் உண்டாகுமாறு தம்முடைய கரங்களால் அமைந்த .திருப்பணிகளைப் புரிய ஆரம்பித்தார். பாடல் வருமாறு:

" சென்றுதிரு வீரட்டா

னத்திருந்த செம்பவளக் குன்றை அடிபணிந்து

கோதில் சிவசின்னம் அன்றுமுதல் தாங்கி

ஆர்வமுறத் தம்கையால் துன்றுதிருப் பணிகள்

செய்யத் தொடங்கினார்.” * சென்று-அவ்வாறு திலகவதியார் திருவதிகைக்கு எழுந் தருளி. திருவீரட்டானத்து-திருவதிகை வீரட்டிானத்தில்: இருந்த-திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த, செம்சிவப்பாக இருக்கும். பவளக் குன்றை-பவள மலையைப் போன்றவராகிய வீரட்டேசுவரருடைய உருபு மயக்கம். அடி-திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். பணிந்துவணங்கி விட்டு. கோது-குற்றம். இல்-இல்லாத கடைக் குறை. சிவசின்னம்-திருநீறு, உருத்திராக்க மாலை, ச.ா பாரம் ஆகிய சைவ சமயத்துக்கு உரிய அடையாளங்களை. சின்னம்: ஒருமை பன்மை மயக்கம். அன்று முதல்-அந்த நாள் முதலாக. தாங்கி-தரித்துக்கொண்டு. ஆர்வம்-பேராவல். உற-உண்ட்ாகுமாறு. த்:சந்தி. தம்-தம்முடைய கையால்திருக்கரங்களால் ஒருமை பன்மை மயக்கம். துன்று-அமைந் துள்ள. திருப்பணிகள்-திருப்பணிகளை. செய்யபுரிந்தருள. த்:சந்தி. தொடங்கினார்.ஆரம்பித் தார். " சிவபெருமானுக்குப் பவளக் குன்றை உவமானம்ாகக்