பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் | 85

இந்தப் பாடல் குள்கம். மன்னு-திருவதிகை வீரட்டா னத்தில் நிலைபெற்று விளங்கும். தபோதனியார்க்கு-தவ மாகிய செல்வத்தைப் பெற்றவராகிய திலவதியாருக்கு. க்:சந்தி. கனவின் கண்-அவர் துயிலும்போது உண்டான சொப்பனத்தில், மழ-இளம் பருவத்தைப் பெற்ற. விடை யார்-இடப வாகனத்தை ஒட்டுபவராகியஅந்தவீரட்டானேசு வரர். உன்னுடைய-நின்னுடைய. ம ன-உள் ளத் தி ல் உள்ள. க்:சந்தி, கவலை-கவலையை. ஒழிநீ-நீ விட்டு விடுவாயாக. உன் உட்ன்-உன்ன்ோடு. பிறந்தான்-பிறந்த வனும் உன்னுடைய தம்பியும் ஆகிய மருணிக்கி. முன்னமே. முன் பிறவியிலேயே. முனியாகி-ஒரு முனிவனாக இருந்து. எனை-என்னை: இட்ைக்குறை. அடைய-அடைவதற்காக. த்:சந்தி. தவம் தவத்தை. முயன்றான்-புரிந்தான். அன் னவனை-அத்தகைய அவனை. இனி-இனிமேல். ச் சந்தி . சூலை-கடுமையாகிய வயிற்று வலியை. மடுத்து-வழங்கி. ஆள்வன்-ஆளாக ஏ ற் று க் கொள்வேன். என-என்று: இடைக்குறை. அருளி-திருவாய் மலர்ந்தருளிச் செய்து பிறகு வரும் 49-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்த மருணிக்கி பழைய பிறவியில் செய்த நல்ல தவத்' தினால் குற்றத்தினுடைய அளவு சிறிதேனும் தவறும் திருத் தொண்டராகிய அந்த மருணிக்கியாரை எம்முடைய ஆளா கப்புரிய ஆரம்பிக்கும்.கடுமையாகிய வயிற்றுவலி என்னும் - வேதனையை ஒற்றைக் கண்ணைத் தம்முடைய நெற்றியில் பெற்றவராகிய, அந்த, விரட்டானேசுவரர் வழங்கியருள கடுமையாகிய நெருப்பைப் போல வருத்தத்தைத் தரும் கொடுமையாகிய, மிக்கு உண்டாகிய பெரிதாக இருக்கும் சூலையை அந்த மருணிக்கியாருடைய வயிற்றுக்குள் புகுத் தது. பாடல் வருமாறு: . . .

பன்டு கற்றவத்துப்

- ..M... نو"،" 4,4 .t;

முழுதின்ள விறைவழுவும்