பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் : 99

இயல் - தன்மையைப் பெற்ற நறு - இ ய ற் ைக யாக நறுமணம் கமழும். மென் . மென்மையைப் பெற்றி. கூந்தல் . கூந்தலைக் கொண்ட அணங்கனார் - தெய்வப் பெண்களைப் போன்றவர்களாகிய பெண்மணிகளின். அனார் : இடைக்குறை: ஒருமை பன்மை மயக்கம். திறத்தில் பக்கத்தில் அற்றம் - இ. ரகசியம். புறம்வெளியில், ஒரு வெளியுறாமல் ஒருவகையிலும் வெளிப் படாமல். பொதிந்த - தன்னுடைய உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த சிந்தனையினோடு - எ ண் ண த் தோ டு, முறைமையின் - முறையிலிருந்து. வழாமை . தவறாமல், வைகி - அந்த நாகப்பட்டினத்தில் தங்கியிருந்து கொண்டு. முகம் - தன்னுடைய திருமுகம். மலர்ந்து - அந் த ப் பரமதத்தன் மலர்ச்சியை அடைந்து, ஒழுகும் - நடந்து வரும். நாளில் - காலத்தில். -

கூந் த லுக் குக் கருமணல் உ வ ைம: கூந்தல் அறல் பவளம் செய்ய வாய்." . எ ன் று சேரமான் பெருமாள் நாயனாரும், நெறி தரு குழலை அறல் என்பர்கள்." என்று பட்டினத்துப் பிள்ளையாரும், *தேப்பாய கூந்தல்.", நுண்மணல் அறல் வார்ந்தன்ன நன்னெறியல்லே. (குறுந்தொகை, 1 - 4 ) என்று நக் ரேரும், ஆரம்சாறும் அளல் போற் கூந்தல்..' (குறுந் தொகை, 286 :3) என்று எயிற்றியனாரும், தாமரைச் செவ்வாய்த் தன்னாற்கூந்தல். (சிலப்பதிகாரம்: : 74), . :விரைமலர் நீங்கா அவிரளற். கூந்தல்." (சிலப்பதிகாரம், ,置器 :147) என்று இளங்கோவடிகளும், 1.அறவியற் கூந்தற் கண்வான்." (எழுச்சிப் படலம், 377) என்று கம்பரும் பாடியவற்றையும் காண்க. r . - பிறகு வரும் 87 - ஆம் சுவியின் உள்ளுறை வருமாறு:

நறுமணம் மலரும் மலர்கள் மலர்ந்திருக்கும் பலவகை யான மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழில் சுற்றி யிருக்கும் பழைய ஊராகிய நாகப்பட்டினத்தில் வாழும் தலைமைப் பதவியை வகிக்கும் வைசியரோடும் பெரிய