பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பெரிய புராண விளக்கம் . 9

நிதியத்துக்கு உரியவனாகிய குபேரன் என்று கூறுமாறு வந்து அடைந்த செல்வத்தை மிகுதியாகப் பெற்று விளங்கி கரையை மோதும் அ ைல க ைள ப் .ெ ப ற் ற சமுத்திரத்தில் மரக்கலங்களை ஓடச் செய்யும் புகழைப் பெற்ற அந்த வைசியனுடைய பத்தினியிடம் பெருகிய ஒளியை வீசும் திருவிளக்கைப் போல ஒரு பூங்கொடியைப் போன்ற பெண்மணியை அருமையாக ஈன்றெடுத்தான்." பாடல் வருமாறு :

" முருகலர் சோலை மூது

ரதன்முதல் வணிக ரோடும் இருகிதிக் கிழவன் என்ன - எய்திய திருவின் மிக்குப்

பொருகடற் கலங்கள் போக்கும்

புகழினான் மனைவி தன்யால் பெருகொளி விளக்குப் போலோர்

பெண்கொடி அரிதிற் பெற்றான்." - முருகு - நறுமணம். அலர் - மலரும். சோலை . மலர்கள் மலர்ந்திருக்கும் பலவகையான மரங்கள் வளர்ந்து திற்கும் பூம்பொழில் சுற்றி விளங்கும். அந்த மரங்களாவன: தேக்கு மரம், வாகை மரம், வேங்கை மரம், மா மரம், துணா மரம், மகிழ மரம், நெல்லி மரம், விளா மரம், அரிநெல்லி மரம், பவள மல்லிகை மரம், பூவரச மரம், வேப்ப மரம் முதலியவை. மூதூர் - பழைய ஊராகிய நாகப்பட்டினத்தில் வாழும். முதல் - தலைமைப் பதவியை வகிக்கும். வணிகரோடும் - வைசியரோடும். இருநிதி.சங்க நிதி, பதுமநிதி என்னும் நிதிகளுக்கு. நிதி : ஒருமை பன்மை மயக்கம். க் சந்தி. கிழவன் . உரியவனாகிய குபேரன். என்ன - என்று கூறுமாறு. எய்திய வந்து சேர்ந்த, திருவின் - செல்வத்தை, மிக்கு - மிகுதியாகப் பெற்று விளங்கும், ப் : சந்தி. பொரு - கரையை மோதும் அலை களைப் பெற்ற. கடல் - சமுத்திரத்தில், கலங்கள் - மரக் கலங்களை. போக்கும் ஒடச் செய்யும். புகழினான்.