பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பெரிய புராண விளக்கம் . 8

மடமகள் தன்னைப் பெற்று

மங்கலம் பேணித் தான்முன் புடனுறை வஞ்சி கீத்த

ஒருபெரு மனைவி யாரைத் தொடர்பற கினைந்து தெய்வத்

தொழுகுலம் என்றே கொண்டு கடனமைத் தவர்தம் காமம்

காதல்செய் மகவை இட்டான். '

மடமகள் தன்னை - அந்தப் பரமதத்தன் ஒரு மடப் பத்தைப் பெற்ற ஒரு பெண் குழந்தையை. தன் : அசை நிலை. ப் : சந்தி. பெற்று - ஈன்றெடுத்து. மங்கலம் - அவ்வாறு பெற்ற புதல்விக்கு உரிய மங்கல காரியங்களை, ஒருமை பன்மை மயக்கம். என்றது புண்யாஹவசனம் செய்தல், தொட்டில் போடுதல், காப்பு அணிதல், பெயர் வைத்தல் முதலியவற்றை, பேணி - விரும்பிச் செய்து: த் : சந்தி. தான் என்றது. பரமதத்தனை. முன்பு - தான் காரைக்காலில் இருந்த அந்த முன் காலத்தில். உடனுறைவு - அந்தப் புனிதவதியாரோடு உடன் உறைவதாகிய புணர்ச் சியைப் புரிவதற்கு, அஞ்சி பயப்பட்டு. நீத்த - அந்தக் காரைக்காலில் விட்டுவிட்டு வந்த, ஒரு - ஒப்பற்ற. பெரு - பெருமையைப் பெற்ற மனைவியாரை - தன்னு டைய பத்தினியாராகிய புனிதவதியாரை. த் : சந்தி. தொடர்பு - மனைவி என்ற சம்பந்தம். அற - இல்லாமல். நினைந்து - எண்ணி. தெய்வத்தொழு குலம் - தொழுவ தற்குரிய தெய்வத் தன்மையைப் பெற்ற சாதியைச் சேர்ந்தவள். என்றே கொண்டு - என்றே தன்னுடைய உள்ளத்தில் எண்ணிக்கொண்டு. கடன் அமைத்து - தன்னு டைய கடமையை அமைப்பவராகி. அவர்தம் - அந்தப் புனிதவதியாருடைய தம் : அ ைச நி ைல. ந.ா ம ம் - புனிதவதி என்ற திருநாமத்தை. காதல் செய் - தான் விரும்புவதைப் புரியும். மகவை - பெண் குழந்தைக்கு: உருபு மயக்கம். இட்டான் - வைத்தான். . s ..