பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 103

அடுத்து உள்ள 39 - ஆம் கவியின் கருத்து வருமாறு :

- 'இல்லற நிலையில் இந்தப் பரமதத்தன் இந்த நாகப்பட்டினத்தை அடைந்து அந்தச் சிவத்தலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான்; இதன்பிறகு நெடுங்காலமாக விளங்கும் யாராலும் ஏறுவதைப் பெறாத கன்னித் தன்மையைப் பெற்ற பெரிய திருமதில் சுற்றியிருக்கும் மாடங்களைப் பெற்ற காரைக்காலில் வாழும் வைசியனான தனக்கு ஒப்புக் கூறுவதைக் கடந்த செல்வத்தைப் பெற்ற தனதத்தன் என்பவனுடைய புதல்வியாரும் நிலைபெற்ற கம்போடு இல்லறத்தைச் செய்து வாழ்ந்து கொண்டிருக்க." பாடல் வருமாறு : - -

  • இன்னிலை இவன் இங்கெய்தி - இருந்தனன்; இப்பால் டுேம்

கன்னிமா மதில்சூழ் மாட்க்

காரைக்கால் வணிக னான தன்னிகள் கடந்த செல்வத்

தனதத்தன் மகளார் தாமும் மன்னிய கற்பி னோடு .

மனையறம் புரிந்து வைக.'

இந்தப் பாடல் குளகம். இல் - இல்லற வாழ்க்கை யாகிய, நிலை - நிலையை. இவன் . இந்தப் பரமதத்தன். இங்கு - இந்த நாகப்பட்டினத்தில். எய்தி - அடைந்து. இருந்தனன் - வாழ்ந்து கொண்டிருந்தான். இப்பால் - இதன் பிறகு, நீடும் - நெடுங்காலமாக விளங்கும். கன்னி - யாராலும் ஏறுவதைப் பெறாத கன்னித் தன்மையைப் பெற்ற. மதில் - திருமதில். சூழ் சுற்றியிருக்கும். மாட மாடங்கள் ஓங்கி நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். க் : சந்தி, காரைக்கால் - காரைக்காலில் வாழும். வணி கனான - வைசியன் ஆன. தன். தனக்கு. நிகர் . சமான மாக வேறு ஒருவரைக் கூறுவதை: ஆகுபெயர். கடந்த அகன்ற, செல்வ - செல்வத்தைப் பெற்ற. த் சந்தி.