பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பெரிய புராண விளக்கம் . 9

தனதத்தன் - தனதத்தனுடைய. மகளார் தாமும் - புதல்வியாராகிய புனிதவதியாரும். தாம் : அசைநிலை. மன்னிய - நிலைபெற்ற. கற்பினோடு - கற்போடு. ம ைன ய ம் - இ ல் ல ற வாழ்க்கையை. புசி ந் து . விதம்பி ந - த் தி க் கொண்டு. வைக - வாழ்ந்து வர.

பிறகு உள்ள 48 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

உண்டாகும் செல்வத்தைப் பெருகச் செய்வதற் காகக் கப்பலில் ஏறிக்கொண்டு சமுத்திரத்தில் பயணம் செய்யும் புனிதவதியாருடைய கணவனாகிய பரமதத்தன் புகழ் வளர்ந்து ஒங்கும் பாண்டி நாட்டில் ஒரு பெரிய நகரத்திற்குச் சென்று அங்கே நிலைபெற்று வாழ்ந்து அளவு இல்லாத பெரிய நிதியத்தை உண்டாக்சி அந் நகரத்தில் தங்கிக்கொண்டு இனிமையோடு வாழ்ந் திருந்தான்' என ஒளி கிளர்ந்து எழும் அழகிய பூங் கொம்பைப் போன்றவராகிய புனிதவதியாருடைய உறவினர்கள் கேள்விப்பட்டார்கள். பாடல் வருமாறு :

விளைவளம் பெருக்க வங்கம் மீதுபோம் பரம தத்தன் வளர்புகழ்ப் பாண்டி காட்டோர்

மாநகர் தன்னில் மன்னி அளவில்மா கிதியம் ஆக்கி

அமர்ந்தினி திருந்தான்." என்று கிளரொளி மணிக்கொம் பன்னார்

கிளைஞர்தாம் கேட்டா ரன்றே.' - விளைவளம் - உண்டாகும் செல்வ வளத்தை. பெருக்க. பெருகச் செய்வதற்காக. வங்கம்மீது - கப்பலில் ஏறிக் கொண்டு சமுத்திரத்தில். போம் . பயணம் செய்யும், ப்ரம த த் தன் - புனித வதி யாரு ைடய கணவ னாகிய பரமதத்தன் என்னும் வைசியன். வளர்புகழ் - புகழ் வளரும், சந்தி. பாண்டி நாட்டு - பாண்டி நாட்டில் உள்ள ஓர் - ஒரு மா - பெரிய நகர் தன்னில் -