பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பெரிய புராண விளக்கம் 9

மம்மர்கொள் மனத்த ராகி,

மற்றவன் இருந்த பாங்கர்க்

கொம்மைவுெம் முலையி னாளைக்

கொண்டுபோய் விடுவ தென்றார்.'

அம்மொழி - அந்த வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம், கேட்ட -கேள்விப்பட்ட போதே - சமயத்தி லேயே. அணங்கு - தெய்வப் பெண்ணை. அனார் - போன்றவராகிய புனிதவதியாருடைய இடைக்குறை. சுற்றத்தாரும் - உறவினர்களும்; ஒருமை பன்மை மயக்கம். தம் - த ங் க ளு க் கு. உறு - உ. ள் ள. கிளைஞர் - உறவினர்களை; ஒரு ைம ப ன் ைம ம யக் கம். ப் : சந்தி. போக்கி - அந்தப் பாண்டி நாட்டில் உள்ள பெரிய நகரத்திற்குப் போகச் செய்து. அவன் - அந்தப் பரமதத்தனுடைய. நிலை - நிலையை. தாமும் - என்றது உறவினரிகளை, கேட்டு - ேக ள் வி ப் ப ட் டு. மம்மர் - மயக்கத்தை. கொள் - கொண்ட ம ன த் த ர் ஆகி உள்ளங்களை உடையவர்களாகி, ஒருமை பன்மை மயக்கம். மற்று : அசைநிலை . அவன்-அந்தப் பரமதத்தன், இருந்த - வாழ்ந்திருந்த பெரிய நகரத்தினுடைய ஆகு பெயர். பாங்கர் - பக்கத்தில் . க் : சந்தி. கொம்மை . பருத்தலைப் பெற்ற, வெம் - விரும்பத் தகும். முலையி னாளை - கொங்கைகளைப் பெற்றவளாகிய புனிதவதியை, முலை : ஒருமை பன்மை மயக்கம். க் : சந்தி. கொண்டு போய் - அழைத்துக்கொண்டு சென்று. விடுவது - விடுவீர் களாக வியங்கோள். என்றார் - என்று அந்த உறவினர்கள் கூறினார்கள்: ஒருமை பன்மை மயக்கம். r

அடுத்து உள்ள 42 - ஆம் பாடலின் கருத்து வருமாறு : பெரிய மாணிக்கங்களைப் பதித்த ஒரு பல்லக்கில் தம்முடைய மடப்பம் பொருந்திய நடையில் மயிலினுடைய நடையைப் போல் விளங்குபவராகிய புனிதவதியாரைச் செந்தாமரை மலராகிய பீடத்தில் த ங் கி யி ரு க் கும்