பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 107

ஒப்பற்ற திருமகள் என்று கூறுமாறு ஏறச் செய்து அழகு மருவிய திரைச் சீலையைக் கட்டித் தொங்கச் செய்து விருப்பத்தைப் புரியும் புனிதவதியாருடைய உறவினர்களும் தேனைப் போன்ற வார்த்தைகளைப் பேசும் பெண்மணி களும் ஆகிய எல்லோரும் சுற்றி வர நெடுந்து ரத்தை நடுவில் கடந்து போனார்கள். பாடல் வருமாறு :

மாமணிச் சிவிகை தன்னில்

மடகடை மயில்அன் னாரைத் தாமரைத் தவிசில் வைகும்

தனித்திரு என்ன ஏற்றிக் காமரு கழனி வீழ்த்துக்

காதல்செய் சுற்றத் தாரும் தேமொழி யாவரும் குடிச்

சேணிடைக் கழிந்து சென்றார்.' மா - பெரிய. மணி - மாணிக்கங்களைப் பதித்த: ஒருமை பன்மை மயக்கம். ச் : சத்தி, சிவிகைதன்னில் . ஒரு பல் லக் கி ல். தன் : அ ைச நி ைல. மடநடை - தம்முடைய மடப்பம் பொருந்திய நடையில். மயில் - மயிலினுடைய நடையை: ஆகுபெயர். அன்னாரை - போல விளங்குபவராகிய புனிதவதியாரை. த் : சந்தி. தாமரை - செ ந் தா ம ைர மலராகிய. த் : சந்தி. தவிசில் - பீடத்தில்: ஆசனத்தில். வைகும் - எழுந்தருளி யிருக்கும். தனி - ஒப்பற்ற, த் சந்தி. திரு - திருமகள். என்ன - என்று கூறுமாறு. ஏற்றி - ஏறச் செய்து. க் : சந்தி. காமரு - அழகு மருவிய. கழனி - திரைச் சீலையை. வீழ்த்து - கட்டித் தொங்கவிட்டு. க் சந்தி. காதல் - விருப்பத்தை. செய் - புரியும்: சுற்றத்தாரும் - புனிதவதி யாருடைய உறவினர்களும்; ஒருமை பன்மை மயக்கம். தே - தேனைப் போன்ற. மொழி - வார்த்தைகளைப் பேசும் பெண்மணிகளும்; ஆகுபெயர் மொழி: ஒருமை பன்மை மயக்கம். யாவரும் - ஆகிய எல்லோரும். சூழ - சுற்றி வர. ச் : சந்தி. சேண் - நெடுந்தாரத்தை. இடை