பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10s பெரிய புராண விளக்கம் - 8

போகும் வழியில் நடுவில். க் : சந்தி. கழிந்து - கடந்து. சென்றார் போனார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு உள்ள 43 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

அவ்வாறு சென்றவர்கள் சில தினங்கள் வழியைக் கடந்து போய் அழகிய செந்தமிழ் நாடாகிய பாண்டி நாட்டை அடைந்து மலர்ந்த புகழைப் பெற்ற அந்தப் பரமதத்தன் வாழும் பெரிய நகரத்திற்குப் பக்கத்தில் வந்து சேர்ந்து தங்களுடைய குடும்பத்தில் பிறந்த முதற் பத்தினி யாராகிய புனிதவதியாரைத் தாங்க்ள் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்த பான்மையைத் தொலைதல் இல்லாத சீர்த்தியைப் பெற்ற புனிதவதியாருடைய கணவராகிய பரமதத்தருக்குக் கூறி ஓர் ஆளை முன்னால் போகுமாறு அனுப்பினார்கள். பாடல் வருமாறு :

  • சிலபகல் கடந்து சென்று

செக்தமிழ்த் திருகா டெய்தி மலர்புகழ்ப் பரம தத்தன்

மாககர் மருங்கு வந்து குலமுதல் மனைவி யாரைக்

கொண்டுவக் தணைந்த தன்மை தொலைவில்சீர்க் கணவ னார்க்குச்

சொல்லிமுன் செல்ல விட்டார்.' - சிலபக்ல் - அவ்வாறு சென்றவர்கள் சில தினங்க்ள். பகல் : ஒருமை பன்மை மயக்கம். கடந்து - வழியைக் க்டந்து. சென்று - போய். செந் த மி ழ்த் தி ரு நாடு , அழகிய செந்தமிழ் நாடாகிய பாண்டி நாட்டை, எய்தி - அடைந்து மலர் - எங்கும் பரந்த புக்ழ் - புகழைப் பெற்ற, ப் சந்தி, பரமதத்தன் - அந்தப் பரமதத்தன் ஆறழ்ந்து கொண்டிருக்கும். மா - பெரிய, நகர் - நகரத் திற்கு. மருங்கு வந்து பக்கத்தில் வந்து சேர்ந்து. குல : தங்களுடைய குடும்பத்தில் பிறந்த முதல் மனைவியாரை பரம்தித்தனுடைய முதல் பத்தினியாராகிய புனிதவ்தி