பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 109

யாரை. க் சந்தி. கொண்டு வந்து - தாங்கள் அழைத்துக் கொண்டு வந்து. அணைந்த சேர்ந்த தன்மை - பான்மையை. தொலைவு அகலுதல். இல் - இல்லாத: கடைக்குறை சீர் - சீர்த்தின்யப் பெற்ற. க் : சந்தி, கணவனார்க்கு - புனிதவதியாருடைய கணவராகிய பரமதத்தனாருக்கு ச் சந்தி. சொல்லி - கூறி. முன் - ஒர் ஆளை முன்னால். செல்ல - போகுமாறு. விட்டார் - உறவினர்கள் அனுப்பினார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 44 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அவ்வாறு வந்த ஆட்கள் தான் இருந்த மாநகரத்தை அடைந்த வார்த் தை களைக் கேட்டவுடன் அந்த வைசியனாகிய பரமதத்தனும் தன்னுடைய உள்ளத்தில் பயத்தை அடைந்து, :செழிப்பான திருமணத்தை அந்தப் புனிதவதியாருக்குப் பின்னால் புரிந்துகொண்ட பசுமை யான பொன்னால் ஆகிய வளைகளை அணிந்திருக்கும் பெண்மணியாகிய மனைவியையும் அழைத்துக்கொண்டு வந்து தாங்கள் பெற்றெடுத்த பெண் குழந்தையோடு முன்னால் அடையுமாறு போவேன்' என்று எண்ணி வண்டுகள் மொய்க்கும் கூந்தலைப் பெற்றவராகிய புனிதவதியாரிடம் அந்த வைசியன் வந்தான். பாடல் வருமாறு : . . . . . .

வக்தவர் அணைந்த மாற்றம் - கேட்டலும் வணிகன் தானும் * சிங்தையில் அச்சம் எய்திச்,

செழுமணம் பின்பு செய்த பைக்தொடி தனையும் கொண்டு

பயந்தபெண் மகவினோடு முந்துறச் செல்வேன்' என்று

மொய்குழலவள்பால் வந்தான்.'" வந்தவர் - அவ்வாறு வந்த ஆட்கள்: ஒருமை பன்மை மயக்கம். அணைந்த - தான் இருந்த மாநகரத்தை