பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᎥᎥ 0 . - - பெரிய புராண விளக்கம் . 9

அடைந்த, மாற்றம் - வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். கேட்டலும் - கேட்டவுடன். வணிகன்தானும் - அந்த வைசியனாகிய பரமதத்தனும். தான் : அசைநிலை. சிந்தையில் - தன்னுடைய உள் ள த் தி ல். அச்சம் - பயத்தை. எய்தி - அ ைட ந் து. ச் : ச ந் தி. .ெ ச ழு . செழிப்பாகிய, மனம் - திருமணத்தை. பின்பு . அந்தப் புனிதவதியாருக்குப் பின்னால். செய்த - புரிந்து கொண்ட, பைக்தொடிதனையும் - பசுமையான பொன்னால் ஆகிய வளைகளை அணிந்திருக்கும் பெண்மனியாகிய மனைவி யையும். பைந்தொடி : அன்மொழித் தொகை. தொடி : ஒருமை பன்மை மயக்கம், தனையும் : இடைக்குறை. தன் : அசைநிலை, கொண்டு - அ ைழ த் துக் கொண் டு வந்து. பயந்த தாங்கள் பெற்றெடுத்த. பெண்மகவி. னோடு - பெண்குழந்தையோடு. முந்து உற - முன்னால் அடையுமாறு. ச், சந்தி, செல்வேன் - யான் போவேன். என்று - என எண்ணி. மொய் - வண்டுகள் மொய்க்கும். குழலவர்பால் - இயற்கையான ம ன த் ைத ப் பெற்ற கூந்தலை உடையவராகிய புனிதவதியாரிடம். வந்தான் - அந்தப் பரமதத்தனாகிய வைசியன் வந்தான். . . .

பிறகு வரும் 45 - ஆம் பாடலின் கருத்து வருமாறு : அந்தப் பரமதத்தன் தானும் அந்த இரண்டாம் பத்தினியோடும் தள்ர்நடை நடக்கும் தங்களுடைய பெண் குழந்தையோடும் இளைய பெண் மானைப்போல நின்று கொண்டிருந்த தன்னுடைய முதல் பத்தினியாராகிய, புனிதவதியாருடைய திருவடிகளில் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பின்பு எழுந்து நின்றுகொண்டு, ‘அடியேன் தேவரீருடைய திருவருளால் இங்கே வாழ் வேன் ஆனேன்; இந்த இளைய பெண் குழந்தையும் தன்மையினால் தேவ ரீ ரு ைட ய திருநாமத்தைப் பெற்றவள்.'" என்று அந்தப் பரமதத்தன் கூறிவிட்டு. அந்தப் புனிதவதியாருக்கு முன்னால் தரையில் விழுந்து

வணங்கினான். பாடல் வருமாறு :