பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 11籃*

தானும்.அம் மனைவி யோடும்

தளர்கடை மகவி னோடும் மானிளம் பிணைபோல் கின்ற

மனைவியார் அடியில் தாழ்ந்தே 'யான்உம தருளால் வாழ்வேன்;

இவ்வினங் குழவி தானும் பான்மையால் உமது காமம்."

என்றுமுன் பணிந்து வீழ்ந்தான்.' தானும் - அந்தப் பரமதத்தன் தானும். அம்மனைவி யோடும் . அந்த இரண்டாம் பத்தினியோடும். தளர்நடை . தளர்நடை நடக்கும். மகவினோடும் - தங்களுடைய பெண் குழந்தையோடும். மான் இளம்பிணைபோல் - இ ைள ய பெண் மானைப்போல், நின்ற - அங்கே நின்றுகொண்டி ருந்த மனனவியார் - தன்னுடைய முதற்பத்தினியாராகிய புனிதவதியாருடைய. அடியில் - திருவடிகளில்; ஒருமை பன்மை மயக்கம். தாழ்ந்து - தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பின்பு எழுந்து நின்று கொண்டு. ஏ : அசைநிலை. யான் - அடியேன். உமது - தேவரீருடைய. அருளால் - திருவருளால், வாழ்வேன் - வாழ்ந்து கொண்டிருக்கிறேன்; கால மயக்கம். இவ்விளம்- இந்த இளைய. குழவிதானும் . பெண் குழந்தையும். தான் : அசைநிலை. பான்மையால் . த ன் ைம யி னா ல், உ ம து - தேவ ரீ ரு ைட ப. நாம ம் - தி ரு நா ம த் ைத ப் .ெ ப ற் ற வன்: ஆகுபெயர். என்று - என அந்தப் பரமதத்தன் கூறிவிட்டு. முன் - அந்தப் புனிதவதியாருக்கு முன்னால். பணிந்து வீழ்ந்தான் - தரையில் விழுந்து வணங்கினான்.

பிறகு உள்ள 46-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

- தம்முடைய கணவனாகிய பரமதத்தன் தம்மைத்

தரையில் விழுந்து பணிய, அதைப் பார்த்த அழகு மருவிய பூங்கொடியைப் போன்றவராகிய புனிதவதியாரும் அங்கே அடைந்து நிற்கும் தம்மு-ை" உறவினர்களிடத்தில்