பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 0 . - பெரிய புராண விளக்கம் - 9

உலகர் கொள்ளும் கலத்தினர் ஆயினும் அலகில் தீமையர் ஆயினும் அம்புலி இலகு செஞ்சடை யார்க்கடி யாரெனில்

தலமு றப்பணிக் தேத்தும் தகைமையார்.'

உலகர் - இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள்: ஒருமை பன் ை12 மயக்கம். கொள்ளும் - ஏற்றுக் கொள்ளும். நலத்தினர். நல்ல பண்புகளைப் பெற்றவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஆயினும் - ஆனாலும். அலகு - கணக்கு இல் இல்லாத கடைக்குறை. தீமையர் - கெட்ட செயல்களைப் புரிபவர்கள்: ஒருமை பன்மை மயக்கம், ஆயினும் - ஆனாலும். அம்புலி - பிறைச்சந்திரன். இலகு விளங்கும். செஞ்சடையார்க்கு - சிவந்த சேடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவ்ராகிய சோமசுந்தரக் கடவுளுக்கு. அடியார் . அடியவ்ர்கள்: ஒருமை பன்மை மயக்கம். எனில் . என்றால், தல்ம் . தரையில். உற. படிய, ப் : சந்தி, பணிந்து - அந்த அடியவர்களை விழுந்து வணங்கி விட்டு. ஏத்தும் - பிறகு தரையிலிருந்து நின்று கொண்டு அந்த அடியவர்களைத் துதிக்கும். தகைமை யார் . தகுதியாகிய பான்மையைப் பெற்றவர் அந்தக் குலச்சிறை நாயனார்: தோன்றா எழுவாய்.

பிறகு உள்ள 6-ஆம் உள்ளுறை வருமாறு:

  • நல்ல குணங்கள் மிக்கவர்களாகிய பக்தர்கள் பல பேர்களாகித் தம்முடைய திருமாளிகைக்கு வந்து சேர்ந்தாலும், உண்ணும் உணவைப் பெற விரும்பி ஒரு பக்தர் வந்து சேர்ந்தாலும், தம்முடைய எண்ணத்தில் பெருகுமாறு செய்த பக்தியோடு அந்தப் பக்தர்களுக்கு எதிரிற் சென்று வரவேற்று நேசம் மிகுதியாக அமைந்து திருவமுதை அந்தப் பக்தர்களை உண்ணச் செய்யும் நல்ல பண்பைப் பெற்றவர் அந்தக் குலச்சிறை நாயனார். பாடல் வருமாறு : .