பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குல்ச்சிறை நாயனார் புராணம் - . . I I

பண்பு மிக்கார் பலராய் அணையினும் உண்பு வேண்டி ஒருவர் அணையினும் எண்பெ ருக்கிய அன்பால் எதிர்கொண்டு நண்பு கூர்ந்தமு தூட்டும் கலத்தினார், ' பன்பு - நல்ல குணங்கள்; ஒருமை பன்மை மயக்கம், மிக்கார் . மிக்கவர்களாகிய பக்தர்கள்: ஒருமை பன்மை மயக்கம். பலராய் பல பேர்களாகி, ஒருமை பன்மை மயக்கம். அணையினும் - தம்முடைய திருமாளிகைக்கு வந்து சேர்ந்தாலும். உண்ப . உண்ணுவதற்குரிய பண்டங் களை, அவையாவன : சம்பா அரிசிச்சோறு, வாழைக் காய்க்கறி, வெண்டைக்காய்க்கறி, புடலங்காய்க்கறி, அவரைக்காய்க்கறி, பூசணிக்காய்க்கறி, பறங்கிக்காய்க்கறி, கொத்தவரங்காய்க்கறி, கோவைக்காய்க்கறி முதலிய வியஞ்சனங்களும், குழம்பு, ரஸம், தயிர், பச்சடி, ஊறு காய், ஆசனப் பலகை, கைகழுவ நீர், வாயைத் துடைத்துக் கொள்ள துண்டு, பாயசம், வடை, அப்பளம், அதிரசம், குஞ்சாலாடு, மைசூர்ப்பாகு, பதிர்ப்பேணி, வாழைக்காய் வறுவல், கருணைக் கிழங்கு வறுவல் முதலியவை. வேண்டி. தாங்கள் பெற விரும் பி. ஒரு வ ர் - ஒரு பக்தர். அணையினும் - தம்முடைய திருமாளிகைக்கு வந்து சேர்ந்தாலும். எ ண் - தம் மு ைட ய எண்ணத்தில். பெருக்கிய - பெருகுமாறு செய்த. அன்பால் பக்தியோடு: உருபு மயக்கம். எதிர் கொண்டு - அந்தப் பக்தர்களுக்கு எதிரிற் சென்று அவர்களை வரவேற்று. நண்பு . நேசம். கூர்ந்து - மிகுதியாக அமைந்து. அமுது - திருவமுதை: பாற்சோற்றை, ஊட்டும் - உ ண் ணு மாறு செய்யும். நலத்தினார் . நல்ல பண்பைப் பெற்றவர் அந்தக் குலச் சிறை நாயனார்; இதுவும் தோன்றா எழுவாய்.

பிறகு வரும் 7-ஆம் கவியின் கருத்து வருமாறு :

அந்தக் குலச்சிறை நாயனார் விபூதி, கெளபீன ஆடை, உருத்திராக்க மாலை, சடாபாரம் ஆகிய சைவ சமயத்துக்குரிய சாதனங்களால் விளங்கி எல்லாத் தேவர்