பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

参

12 பெரிய புராண விளக்கம் . 9

களுக்கும் முதல் தேவராகிய சோமசுந்தரக் கடவுளுக்கு உரிய ந, ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரங்களாகிய அவற்றை உச்சரிக்கும் தம்முடைய நாவின் வளைவினால் ஒதுபவர்களாகிய சிவனடியார்களினுடைய திருவடிகளை ஒவ்வொரு நாளும் துதித்து வணங்கிய நல்ல பண்பைப் பெற்றவர்." பாடல் .

வருமாறு :

பூதி கோவணம் சாதனத் தாற்பொலிங் தாதி தேவர்தம் அஞ்செழுத் தாமவை ஒது நாவனக் கத்தால் உரைப்பவர் பாதம் நாளும் பரவிய பண்பினார்."

பூதி - விபூதி. கோ வ ண ம் - .ெ கள பீ ன ஆடை,

சாதனத்தால் - உருத்திராக்க மாலை, சடாபாரம் ஆகிய

சைவ சமயத்துக்குரிய சாதனங்களால் : ஒருமை பன்மை

மயக்கம், பொலிந்து - விளங்கி. ஆதிதேவர்தம் . எல்லாத்

தேவர்களுக்கும் முதல் தேவராகிய சோமசுந்தரக்

கடவுளுக்கு உரிய. தம் : அசைநிலை, அஞ்செழுத்து

ஆம் - ந, ம, சி, வா ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரமாகும். எழுத்து: ஒருமை பன்மை

மயக்கம். அவை . அவற்றை, ஒது - உச்சரிக்கும். நா.

தம்முடைய நாக்கின், வணக்கத்தால் . வளைவினால்,

உரைப்பவர் ஒதுபவர்களாகிய சிவனடியார்களினுடைய:

ஒருமை பன்மை மயக்கம். பாதம் - திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். நாளும் . ஒ வ் வொரு நாளிலும். பரவிய துதித்து வ ண ங் கி ய. ப ண் பி னா ர் - நல்ல பண்பைப் பெற்றவர். * , .

பிறகு உள்ள சி.ஆம் கவியின் கருத்து வருமாறு: இத்தகைய நல்ல ஒழுக்கத்தைப் பெற்றவர் அந்தக்

குலச்சிறை நாயனார். முடிவு இல்லாத சீர்த்தியோடு

விளங்கிய செந்தமிழ் நாட்டின் தெற்கில் உள்ள பாண்டி

நாட்டை ஆட்சி புரிபவனாகிய நெடுமாறனுக்குச் சீர்த்தி