பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலச்சிறை நாயனார் புராணம் 双密”一

யோடு விளங்கும் நிலை பெற்ற புகழைக் கொண்ட அமைச்சர்களுக்கு மேலாக உள்ள முதல் அமைச்சர் அந்த நாயனார்; பகைவர்களைப் போரில் அழித்து உறுதியான நிலைமையில் நிலைத்து நின்றிருக்கிறவர் அந்த நாயனார்." பாடல் வருமாறு : - .

1 இன்ன நல்லொழுக் கத்தினார், ஈறில்சீர்த்

தென்ன வன்நெடு மாறற்குச் சீர்திகழ் மன்னு மந்திரி கட்குமே லாகியார், ஒன்ன வர்ச்செற் றுறுதிக்கண் கின்றுளார். - இன்ன . இத்தகைய நல்லொழுக்கத்தினார் . நல்ல ஒழுக்கத்தைப் பெற்றவர் அந்தக் குலச்சிறை நாயனார்: தோன்றா எழுவாய். ஈ று - முடிவு. இல் - இல்லாத்: கடைக்குறை. சீர் - சீர்த்தியோடு விளங்கிய த் : சந்தி. தென்னவன் . செந்தமிழ் நாட்டின் தெற்குத் திசையில் உள்ள பாண்டி நாட்டை ஆட்சி புரிபவனாகிய, நெடு மாறற்கு நெடுமாற நாயனார் என்னும் பாண்டிய மன்னனுக்கு. ச் : சந்தி. சீர். சீர் த் தியோ டு. திகழ் - விளங்கும். மன்னு - நிலை பெற்ற புகழைக் கொண்ட மந்திரிகட்கு - பாண்டிய மன்னனுடைய அமைச்சர்களுக்கு. மேலாகியார் . மேலாக உள்ள முதல் அமைச்சர் அந்த, நாயனார்; தோன்றா எழுவாய். ஒன்னவர் . பகைவர் களை ஒருமை பன்மை மயக்கம். ச் : சந்தி. செற்று . போரில் அழித்து. உறுதிக் கண் - உறுதியான நிலைமையில். நின்றுளார் . நிலைத்து நின்றிருக்கிறவர் அந்த நாயனார்: தோன்றா எழுவாய். உளார்: இடைக்குறை:

அடுத்து வரும் 9-ஆம் கவியின் உள்ளுறை வரும்ாறு : அப்படி இருப்பதாகிய செய்கைகளைச் செய்பவராகி யவர் அந்தக் குலச்சிறை நாயனார்: கங்கையாற்றைத் தன்னுடைய தலையின் மேல் அணிந்த நாயனாராகிய சோமசுந்தரக் கடவுளினுடைய திருவடிகளை நினைத்து அந்தக் கடவுளினுடைய புகழைச் சொல்லிக் கொண்டு.