பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...] 3 பெரிய புராண விளக்கம் . 9

இருப்பவர் அந்தக் குலச்சிறை நாயனார். பாண்டி நாடு முழுவதும் பரவிய சீர்த்தியை அணிந்த பாண்டிய மன்னனுடைய பெ ரு மை ையப் பெற்ற பட்ட மகிஷியாராகிய மங்கையர்க்கரசியார் விரும்பிய திருத் தொண்டுகளுக்கு உண்மையான திருத்தொண்டர் ஆனவர் அந்தக் குலச்சிறை நாயனார். பாடல் வருமாறு :

ஆய செய்கைய ராமவர் ஆறணி நாய னார்திருப் பாதம் கவின்றுளார்; பாய சீர்புனை பாண்டிமா தேவியார் மேய தொண்டுக்கு மெய்த்தொண்ட ராயினார்.'

ஆய - அப்படி இரு ப் ப த ா கி ய, செய்கையராம் . செய்கைகளைச் செய்பவராகும். அவர் . அந்தக் குலச் சிறை நாயனார், ஆறு . க ங் ைக யா ற் றை. அணி - பகீரதனுடைய விருப்பத்தின்படி தம்முடைய தலையின் மேல் அணிந்து கொண்ட நாயனார் . நாயனாராகிய சோமசுந்தரக் கடவுளினுடைய. திருப்பாதம். திருவடி களை ஒருமை பன்மை மயக்கம். நவின்றுளார் - நினைத்து அந்தக் கடவுளினுடைய புகழைச் சொல்லிக் கொண்டிருப் பவர். உளார் : இடைக்குறை. பாய - பாண்டிய நாடு முழுவதும் பரவிய, சீர் - சீர்த்தியை. புனை - அணிந்த பாண்டிமா தே வி ய | ர் - ப - ன் டி ய மன்னனுடைய பெருமையைப் பெற்ற பட்டமகிஷியாராகிய மங்கையர்க் கரசியார். மேய விரும்பிய, .ெ த .ா ண் டுக் கு திருத் தொண்டுகளுக்கு, ஒருமை பன்மை மயக்கம். மெய் . உண்மையான. த் : சந்தி. தொண்டர் - உதவி புரியும் .திருத்தொண்டர். ஆயினார் . ஆனவர் அந்தக் குலச்சிறை நாயனார்; தோன்றா எழுவாய். -

பிறகு உள்ள 10-ஆம் கவியின் கருத்து வருமாறு : பொலிவைப் பெறாத செயல்களைச் செய்வதில் விருப்பத்தைப் பெற்ற அருகத் பரமேஷ்டியை வணங்கும் அமணர்கள் கூறும் பொய்யாகிய வார்த்தைகளைப்