பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலச்சிறை நாயனார் புராணம் 15

போக்கியருளவும், பாண்டிய மன்னர் ஆட்சி புரியும் பாண்டி நாட்டில் வாழும் பக்தர்கள் விபூதியை வாழ்த்தி அணியவும், நிலைபெற்று விளங்கும் சீகாழி நகரத்தில் வாழும் பக்தர்களினுடைய தலைவரும், வள்ளலாரு மாகிய திருஞான சம்பந்த மூர்த்தி, நாயனாருடைய தங்கத்தைப் போன்ற திருவடிகளைத் தம்முடைய தலையில் வைத்துக் கும் பிட்டு மகிழ்ச்சியை அடைந்த சிறப்பான பெருமையைப் பெற்றவர் அந்தக் குலச்சிறை நாயனார்." :பாடல் வருமாறு : . . . -

புன்னயத்தரு கந்தர் பொய் 器函á叫á தென்னர் நாடு திருநீறு போற்றவும் மன்னு காழியர் வள்ளலார் பொன்னடி சென்னி சேர்த்தி மகிழ்ந்தசி றப்பினார்." - புன் - பொலிவைப் பெறாத நயத்து - செயல்களைச் செய்வதில் விருப்பத்தைப் பெற்ற. அருகந்தர் - அருகத் பரமேஷ்டியை வணங்கும் சமணர்கள்: ஒருமை பன்மை மயக்கம். பொய் - கூறும் பொய்யாகிய வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். நீக்கவும் . போக்கியருளவும். தென்னர் . பாண்டிய மன்னர். நாடு ஆட்சி புரியும் பாண்டிய நாட்டில் வாழும் பக்தர்கள் இட ஆகு பெயர். திருநீறு - வி பூ தி ைய. போற் ற வும் - வாழ்த் தி த் தங்களுடைய திருமேனிகள் முழுவதும் பூசிக்கொள்ளவும். மன்னு . நிலைபெற்று விளங்கு ம். காழியர் . சீகாழி நகரத்தில் வாழும் அந்தணர்களினுடைய தலைவரும். வள்ளலார் . வள்ளலாருமாகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய. பொன் . தங்கத்தைப் போன்ற, அடி - திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். சென்னி . தம்முடைய தலையில் சேர்த்தி . வைத்துக் கும்பிட்டு. மகிழ்ந்த - மகிழ்ச்சியை அடைந்த சிறப்பினார் - சிறப்பினைப் பெற்றவர் அந்தக் குலச்சிறை நாயனார்: தோன்றா எழுவாய். -: , , -

பிறகு வருவது இந்தக் குலச்சிறை நாயனார் புராணத்தின் இறுதிப் பாடல். அதன் கருத்து வருமாறு: