பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - > பெரிய புராண் εθεπααιο - இ

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புரிந்தருளிய அனல் வாதம், புனல் வாதம், தருக்க வாத்ம் என்னும் வாதங்களில் தோல்வியை அடைந்த சமணர்களை வலிமையாகிய கழுக்களில் அவர்களால் உண்டாகிய திங்குகள் அகலுமாறு ஏறச் செய்தவராகிய குலச்சிறை நாயனாருடைய திருத்தொண்டின் திறத்தை எந்த அளவில் வாழ்த்திப் பாடினேன்? இனிமேல் வேதங்கள் கூறிய நீதி கிளைத் தெரிந்து கொண்ட பெருமிழலைக் குறும்ப நாயனாருடைய திருவடிகளைத் துதித்து வணங்குவேன்." பாடல் வருமாறு : - . - -

வாதில் தோற்ற அமணரை வன்கழுத் தீது நீங்கிட ஏற்றுவித் தார் திறம் - - யாது போற்றினேன்? மேலினி ஏத்துகேன் வேத நீதி மிழலைக் குறும்பர்தாள்.' . வாதில் - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். புரிந்தருளிய அனல் வாதம், புனல் வாதம், தருக்க வாதம், என்னும் மூன்று வகை வாதங்களில்; ஒருமை பன்மை மயக்கம். தோற்ற - தோல்வியை அடைந்த அமணரை. சமணர்களை ஒரு ைம ப ன் ைம மயக்கம் வன் - வலிமையைப் பெற்ற, கழு . கழுக்களில்; ஒருமை பன்மை மயக்கம். த் சந்தி. தீது - அ ந் த ச் சமணர்களால் உண்டாகிய தீங்குகள், ஒருமை பன்மை மயக்கம். நீங்கிட - அகலுமாறு. ஏற்றுவித்தார் . ஏறச் செய்தவராகிய குலச் சிறை நாயனார். திறம் - புரிந்த தொண்டுகளின் திறத்தை. யாது. எந்த அ ள வில். போற்றினேன் - வாழ்த்திப் பாடினேன். மேல் இனி - இனி மேல். வேத - வேதங்கள் கூறிய ஒருமை பன்ம்ை மயக்கம். நீதி - நீதிகளைத் தெரிந்து கொண்ட ஒருமை பன்மை மயக்கம். மிழலைக் குறும்பர் - பெருமிழலைக் குறும்ப நாயனாருடைய தாள் - திருவடிகளை ஏத் துகே ன் . துதித்து வணங்குவேன். இந்தப் பாடல் சேக்கிழார் அடுத்து வரும் பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணத்துக்குத் தோற்றுவாயாகப் பாடியருளியது. , - -