பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்

- இனிமேல் பெரிய புராணத்தில் 5 - ஆவதாக உள்ள .திருநின்ற சருக்கத்தில் 3-ஆவதாக விளங்கும் பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணத்தின் பாடல்களின் விளக்கத்தை எழுதத் தொடங்குகிறேன். அதில் வரும் முதற் பாட்டின் உள்ளுறை வருமாறு : r

மாமரங்களும், நெருங்கியிருக்கும் குலைகளை உடைய

தென்ன மரங்களும், பலா மரங்களும், கமுக மரங்களும்

சுற்றியுள்ள் பக்கங்களைப் பெற்றதாகி ஒவ்வொரு விதியிலும் விபூதியின் பிரகாசம் விரியுமாறு பூசியுள்ள

பக்தர்கள் பொருந்தி விளங்குகின்ற சிவத்தலம், மனு

நீதியிலிருந்து தவறாத வழியில் நடப்பவர்களாகி நிலைத்து வாழும் குடிமக்களால் நீளமான இந்த மண்ணுலகத்தின் மேல் திகழும் பழமையாக உள்ள திருப்பதி மிழலை நாட்டில் உள்ள பெருமிழலை என்னும் சிவத்தலம் ஆகும்." பாடல் வருமாறு :

குதம் நெருங்கு குலைத்தெங்கு

பலவு பூகம் சூழ்புடைத்தாய் வீதி தோறும் நீற்றின்ஒளி

விரிய மேவி விளங்குபதி