பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 8 பெரிய புராண விளக்கம் . 9

நீதி வழுவா நெறியினராய்

நிலவும் குடியால் நெடுநிலத்து

மீது விளங்கும் தொன்மையது

மிழலை காட்டுப் பெருமிழலை."

சூதம் . மாமரங்களும்; ஒருமை பன்மை மயக்கம். நெருங்கு - நெருக்கமாக விளங்கும். குலை - காய்க்குலை களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம், த் : சந்தி. தெங்கு - தென்னை மரங்களும்; ஒருமை பன்மை மயக்கம். பலவு - பலா மரங்களும்; ஒருமை பன்மை மயக்கம். பூகம் - கமுக மரங்களும்; ஒருமை பன்மை மயக்கம். சூழ் . சுற்றி வளர்ந்திருக்கும். பு ைட த் தா ய் - பக்கங்களைப் பெற்றதாகி; ஒருமை பன்மை மயக்கம். வீதிதோறும் . ஒவ்வொரு தெருவிலும், நீற்றின் - விபூதியின். ஒளி . பிரகாசம். வி ரி ய - வி ரி யு மாறு. .ே ம. வி - பூ சி க் கொண்டுள்ள பக்தர்கள் பொருந்தி; தோன்றா எழுவாய். விளங்கு திகழும். பதி - சி வ த் த ல ம். நீதி - மனுநீதியி லிருந்து. வழுவா - தவறாத நெறியினராய் . வழியில் நடப்பவர்களாகி, ஒருமை பன்மை மயக்கம். நிலவும் . நிலைத்து வாழும். குடியால் குடிமக்களால்; குடும்பங் களால் எனலும் ஆம்: ஒருமை பன்மை மயக்கம். நெடு - நீளமாகிய, நிலத்து மீது - இந்த மண்ணுலகத்தின்மேல். விளங்கும் - திகழும். .ெ தா ன் ைம ய து - பழமையைப் பெற்றதாகிய திருப்பதி. மிழலை நாட்டு . மிழலை நாட்டில் உள்ள ப் : சந்தி. பெருமிழலை - பெருமிழலை என்னும் சிவத்தலம் ஆகும். - -

அடுத்து வரும் 2 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அத்தகைய பழமையைப் பெற்ற அழகிய சிவத்தல மாகிய பெருமிழலையினுடைய தலைவராக விளங்குபவர் பெருமிழலைக் குறும்ப நாயனார். தம்முடைய தலையின் மேல் பிறைச்சந்திரனைத் தங்க வைத்திருப்பவராகிய சிவ. பெருமானாருக்கு அடியவர்களுக்கு உரியவையான தாம்