பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் . 113°

அசைநிலை. ஏனோ - என்ன காரணமோ? என்றார் - என்று அந்த உறவினர்கள் கேட்டார்கள்: ஒருமை பன்மை மயக்கம், - - -

அடுத்து உள்ள 47 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்த உறவினர்களைப் பார்த்து, இந்தப் புனித வதியார் மானிடப் பிறவியை உடையவர் அல்லாத நல்ல பெருமையைப் பெற்று விளங்கும் பெண்தெய்வம் ஆதலை: அடியேன் தெரிந்துகொண்டு இவரைவிட்டு இந்த மாநகரத் திற்கு வந்த பிறகு அடியேன் பெற்றெடுத்த இந்தப் பெண் குழந்தைக்கு இவருடைய திருநாமமாகிய புனிதவதி. என்பதை வைத்திருக்கிறேன்; ஆகையால் இந்தப் புனித வதியாருடைய தங்கத்தைப் போன்ற திருவடிகளைத் தரையில் விழுந்து வணங்குங்கள் என்று அந்தப் பரமதத்தன் கூறினான்." பாடல் வருமாறு :

மற்றவர் தம்மை நோக்கி,

  • மானுடம் இவர்தாம் அல்லர்; கற்பெரும் தெய்வம் ஆதல்

நானறிந் தகன்ற பின்பு பெற்றஇம் மகவு தன்னைப்

பேரிட்டேன் ஆத லாலே பொற்பதம் பணிந்தேன்; நீரும்

போற்றுதல் செய்மின்' என்றான். '

மற்று : அசைநிலை. அவர் தம்மை - அந்த உறவினர் களை ஒருமை பன்மை மயக்கம். தம்:அசைநிலை. நோக்கி. பார்த்து. இவர்தாம் - இந்தப் புனிதவதியார். தாம் : அசைநிலை. மானுடம் அல்லர்-மானிடப் பிறவியை உடை யவர் அல்லர். நல் - நல்ல. பெரும் - பெருமையைப் பெற்று விளங்கும். தெய்வம் - பெண்தெய்வம். ஆதல் - ஆக இருப்பதை. நான் - அடியேன் என்றவன் பரமதத்தன். அறிந்து-அறிந்துகொண்டு. அகன்ற-இவரைவிட்டுக் காரைக் காலை நீங்கி அகன்று வந்த பின்பு.பிறகு. பெற்ற