பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l'I4 பெரிய புராண விளக்கம் . 9

அடியேன் சன்றெடுத்த. இம்மகவு தன்னை - இந்தப்பெண் குழந்தைக்கு உருபுமயக்கம், தன் : அசைநிலை. ப் : சந்தி. பேர் . இவருடைய திருநாமமாகிய புனிதவதி என்பதை. இட்டேன் - வைத்திருக்கிறேன்; காலமயக்கம். ஆதலால் - ஆகையால். ஏ :அசைநிலை. பொன் - தங்கத் தைப் போன்ற பதம் - இவருடைய திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். பணிந்தேன் - அடியேன் தரையில் விழுந்து வணங்கினேன். நீரும் . நீங்களும். போற்றுதல் - வாழ்த்துதலை. செய்மின் - செய்து வ ன ங் கு ங் கள். என்றான் - என்று அந்தப் பரமதத்தன் தன்னுடைய உறவினர்களிடம் கூறினான்.

பிறகு வரும் 48 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

என்று அந்தப் பரமதத்தன் கூறியவுடன் அவனுடைய உறவினர்களும், இது ஏனோ?' என்று கூறி நின்று கொண்டிருந்தார்கள்; நறுமணம் வீசும் அழகிய கூந்தலைப் பெற்றவராகிய புனிதவதியாரும் அந்த வைசியனாகிய பரமதத்தன் தன்னுடைய வாயினால் கூறிய வார்த்தை களைக் கேட்டு கொன்றை மலர் மாலையை அணிந்த நீளமான சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாருடைய ஒலிக்கும் வெற்றிக் கழலைப் பூண்டுவிளங்கும் திருவடிகளை வாழ்த்தி வணங்கிவிட்டுத் தம்முடைய திருவுள்ளத்தில் பொருந்திய எண்ணத்தில் மிகுதியாக உள்ள உணர்ச்சியை மேற்கொண்டு திருவாய் மலர்ந்தருளிச் செய்கிறவரா :னார். பாடல் வருமாறு :

என்றலும் சுற்றத் தாரும்,
  • இதுஎன்கொல்?’ என்று கின்றார்: மன்றலங் குழலி னாரும் - வணிகன்வாய் மாற்றம் கேளாக் கொன்றைவார் சடையி னார்தம்

குறைகழல் போற்றிச் சிந்தை