பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 1 I 5

ஒன்றிய கோக்கில் மிக்க

உணர்வுகொண் டுரைசெய் கின்றார்.' என்றலும் - என்று அந்தப் பரமதத்தன் கூறியவுடன். சுற்றத்தாரும் - அவனுடைய உறவினர்களும்; ஒருமை பன்மை மயக்கம். இது - இவ்வாறு இவன் தன்னுடைய மனைவியாகிய புனிதவதியைப் பணிவது. என்கொல் - என்ன காரணம். கொல் : அசைநிலை. என்று - என்று கூறி. நின்றார் - நின்றுகொண்டிருந்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம். மன்றல் - நறுமணம் கமழும். அம் - அழகிய, குழலினாரும் - கூந்தலைப் .ெ ப் ற் ற வ ரா கி ய புனிதவதியாரும். வணிகன் - அந்த ைவ சி ய ன ா கி ய பரமதத்தன். வாய் - தன்னுடைய வாயினால் கூறிய. மாற்றம்-வார்த்தைகளை ஒருமைபன்மை மயக்கம். கேளா - கேட்டு. க்: சந்தி. கொன்றை-கொன்றை மலர் மாலையை அணிந்து கொண்டிருக்கும்; ஆகுபெயர். வார் - நீளமான. சடையினார்தம் - சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற்பெற்றவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி யாருடைய. தம் : அசைநிலை. குறை - ஒலிக்கும். கழல் - வெற்றிக்கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகளை ஆகு பெயர். போற்றி - வாழ்த்தி வணங்கிவிட்டு. ச் : சந்தி, சிந்தை - தம்முடைய தி ரு வு ள் ள த் தி ல். ஒ ன் றி ய - பொருந்திய; சேர்ந்த, நோக்கில் - எண்ணத்தில், மிக்க . மிகுதியாக உள்ள. உணர்வு - உணர்ச்சியை. கொண்டு - மேற்கொண்டு. உ ைர செய் கி ன் றார் - திரு வா ய் மலர்ந்தருளிச் செய்கிறவரானார்.

அடுத்து வரும் 49 - ஆம் பாடலின் கருத்து வருமாறு : - இந்த இடத்தில் இந்தப் பரமதத்தன் எண்ணிய கொள்கை இது; இனிமேல் இந்தப் பரமதத்தனுக்காக அடியேன் தாங்கிக் கொண்டிருந்த அழகு நிலைபெற்று நின்ற தசைகளின் சுமையாகிய இந்த உடலை நீக்கிவிட்டு தேவரீரிடம் அந்தத் திருவாலங்காட்டில் தேவரீருடைய திருவடிகளை வாழ்த்தி வணங்கும் பே யி னு ைட'ய