பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பெரிய புராண விளக்கம் - 9

வடிவத்தை அடியேனுக்குப் பக்குவம் உறுமாறு வழங்கி யருளுதல் வேண்டும்.' என்று பரமேசுவரராகிய அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாரைத் துதித்த அந்தப் புனிதவதியார் நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு : - - ஈங்கிவன் குறித்த கொள்கை

இது,இனி இவனுக் காகத்

தாங்கிய வனப்பு கின்ற

தசைப்பொதி கழித்திங் குன்பால் ஆங்குகின் தான்கள் போற்றும் -

பேய்வடி வடியே னுக்குப் பாங்குற வேண்டும். என்று

பரமர்தான் பரவி கின்றார்.' சங்கு - இந்த இடத்தில். இவன் - இந்தப் பரமதத்தன்.

குறித்த - எண்ணிய, கொள்கை இது - மேற்கொண்ட எண்ணம் இது. இனி - இனிமேல். இவனுக்காக - இந்தப் பரமதத்தனுக்காக. த் : சந்தி. தாங்கிய - அடியேன் தாங்கிக் கொண்டிருந்த, வனப்பு - அழகு. நின்றநில்ைபெற்று நின்ற. த ைசப் பொதி - த ைச க ளின் கமையாகிய இந்த உடலை; அன்மொழித்தொகை, தசை : ஒருமை பன்மை மயக்கம். கழித்து - நீக்கிவிட்டு: உதறிப் போட்டுவிட்டு. இங்கு - இந்தத் திருவாலங்காட்டில். உன்பால் - தேவரீரிடம். ஆங்கு- அந்தத் திருவாலங் காட்டில். நின் - தேவரீருடைய. தாள்கள் - திருவடிகளை. போற்றும் - வாழ்த்தி வணங்கும். பேய் - பேயினுடைய. வடிவு - வடிவம். அடியேனுக்கு - தேவரீருடைய Joytoto வனாகிய அடியேனுக்கு ப் : சந்தி. பாங்கு - பக்குவம். உற - உறுமாறு. வேண்டும் - வழங்கியருளுதல் வேண்டும். என்று . என. பரமர் - பரமேசுவரராகிய அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாருடைய தாள் - திருவடிகளை; ஒருமை பன் ைம ம் யக் கம். பரவி - துதித்துவிட்டு. நின்றார்-அந்தப் புனிதவதியார் நின்று கொண்டிருந்தார்.