பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 11 ?

பிறகு வரும் 50 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு புனிதவதியார் நின்று கொண்டிருந்ததான • அந்தச் சமயத்தில் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் செய்தருளும் ஊர்த்துவ தாண்டவமூர்த்தியார் வழங்கிய திருவருளினால் மேலாகிய வழியின் உணர்ச்சி மிகுதியாக உண்டாக தாம் வேண்டியதையே பெறுபவராகிய அந்தப் புனிதவதியாருடைய திருமேனியில் உள்ள மாமிசங்கள் அடைந்த அழகு எ ல் லா வ ற் ைற - ம் உதறிவிட்டு எலும்பாலாகிய உடலே ஆக மாறி தேவலோகத்தில் வாழும் தேவர்களும் இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்களும் ஆகிய எல்லாரும் வணங்கத்தக்க பேயின் வடிவமாக ஆனார். பாடல் வருமாறு : . . .

ஆனஅப் பொழுது மன்றுள்

ஆடுவார் அருளி னாலே மேனெறி உணர்வு கூர

வேண்டிற்றே பெறுவார் மெய்யில் ஊனடை வனப்பை எல்லாம் உதறின்ற் புடம்பே ஆக வானமும் மண்ணும் எல்லாம்

வணங்குபேய் வடிவம் ஆனார்.' ஆன - அவ்வாறு புனிதவதியார் நின்று கொண்டிருந்த தான. அப்பொழுது - அந்தச் சமயத்தில். மன்றுள் - இரத்தின சபையில். ஆடுவார் - திருநடனம் புரிந்தருளு பவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியார். அருளினால்வழங்கிய திருவருளால். ஏ : அசைநிலை. மேல்-மேன்மை யான, நெறி - வழியினுடைய உணர்வு - உணர்ச்சி. க்ர - மிகுதியாக உண்டாக வேண்டிற்றே - தாம் வேண்டிய பேய் வடித்தையே. பெறுவார் - பெறுபவராகிய புனித வதியாருடைய. மெய்யில் - திருமேனியில் உள்ள. ஊன் - மாமிசங்கள்: ஒருமை பன்மை மயக்கம். அடை - அடைந்

பெ. புரா - 9 - 8