பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 1 I &

மயக்கம். வான - ஆகாய, துந்து பியின் - துந்துபிகளினு டைய ஒருமை பன்மை மயக்கம். நாதம் . இனிய ஒலி. உலகு-இந்த மண்ணுலகம். எல்லாம்-முழுவதும்; இடைக் குறை நிறைந்து-நிரம்பி. விம்ம-முழங்க. உம்பரும்.தேவர் களும்; ஒருமை பன்மை மயக்கம். முனிவர்தாமும் . மு னி வ ர் க ளு ம். தாம் : அ ைச நி ைல. குலவினர். ஒருவரோடு ஒருவர் கைகளைக் கோத்துக்கொண்டு குலாவினார்கள்: ஒருமை பன்மை மயக்கம், கணங்கள் - சிவகணங்கள். எல்லாம் - யாவும். குணலைஇட்டன . கெர்க்கரித்து ஆடின. முன் - முன்னால், நின்ற - நின்று கொண்டிருந்த தொலைவு - குறைதல். இல் - இல்லாத, கடைக்குறை. பல் - பல. சுற்றத்தாரும் - புனிதவதி யாருடைய உறவினர்களும்; ஒருமை பன்மை மயக்கம். தொழுது - அந்தப் புனிதவதியாரை வணங்கிவிட்டு. அஞ்சி. அச்சத்தை அடைந்து. அகன்று - அந்த இடத்தை விட்டு நீங்கி, போனார் - சென்று விட்டார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு உள்ள 52 - ஆம் கவியின் கருத்து வருமாறு : அந்தப் புனிதவதியார் தம்மிடம் தோன்றி எழுந்த சிவஞானத்தினுடைய ஒருமைப்பாட்டினால் உமாதேவி யினுடைய கணவனாகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியை அற்புதத் திருவந்தாதி என்னும் நூலை அந்தச் சமயத்தில் பாடியருளிச் செய்பவராகி, தோற்றப் பொலிவைப்பெற்ற சிவந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாருடைய திருவடி களாகிய செந்தாமரை மலர்களை வாழ்த்தி வணங்கும் நல்ல சிவகணங்களில் ஒரு சிவகணமாக அடியேன் ஆகி விட்டேன்' என விரும்பிப் பாடியருளி. பாடல் வருமாறு : --

  • உற்பவித் தெழுந்த ஞானத் -

தொருமையின் உமைகோன் தன்னை அற்புதத் திருவந் தாதி

அப்பொழு தருளிச் செய்வார்