பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 * பெரிய புராண விளக்கம் - 8

பொற்புடைச் செய்ய பாத

புண்டரீ கங்கள் போற்றும் கற்கணத் தினில்ஒன் றானேன்

கான்’ என்று கயந்து பாடி.'

இந்தப் பாடல் குளகம். உற்பவித்து - அந்தப் புனித வதியார் தம்மிடம் தோன்றி. எழுந்த - எழுந்திருந்த, ஞானத்து - சிவஞானத்தினுடைய. ஒருமையின் - ஒருமைப் பாட்டினால், உமை - உமாதேவியினுடைய. கோன் தன்னை - கணவாகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியை. தன் :அசைநிலை. அற்புதத் திருவந்தாதி - "அற்புதத் திரு அந்தாதி’ என்னும் பிரபந்தத்தை. அப்பொழுது - அந்தச் சமயத்தில். அருளிச் செய்வார் - பாடியருளிச் செய்பவராகி; மு ற் .ெ ற ச் சம். பொற்பு - தோற்றப் பொலிவை. உடை - பெற்ற, ச் : சந்தி. செய்ய - சிவந்த. பா.த - ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாருடைய திருவடிகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். புண்டரீ கங்கள் செந்தாமரை மலர்களை போற்றும் - வாழ்த்தி வணங்கும். த ல் - ந ல் ல. க ண த் தி னி ல் - சிவகணங் களுக்குள் ஒருமை பன்மை மயக்கம். ஒன்று - ஒரு சிவகணம். நான் ஆனேன் - அடியேன் ஆகிவிட்டேன். என்று - என. நயந்து விரும்பி. பாடி - பாடியருளி.

காரைக்கால் அம்மையார் அவ்வாறு பாடியருளிய் அற்புதத் திருவந்தாதியின் முதல் வெண்பாவருமாறு :

  • பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்

சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறம்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.' - -

அந்தக் காரைக்காலம்மையார் தாம் நற்கணத்தில் ஒன்றாகிவிட்டதைக் கூறும் அற்புதத் திரு அந்தாதியில்

வரும் 86 - ஆம் வெண்பர் வருமாறு: