பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் - I 21

  • பெறினும் பிறியாதும் வேண்டேம் நமக்க

துறினும் உறா தொழியுமேனும் சிறிதுணர்த்தி மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம்.

இந்த அந்தாதியில் இறுதியில் உள்ள 101 - ஆம் வெண்பா வருமாறு:

  • உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்

கரைவினால் காரைக்காற் பேய்சொற் - பரவுவார் ஆராத அன்பினோ டண்ணலைச் சென்றேத்துவார் பேராத காதல் பிறந்து. - -

பிறகு 53 - ஆம் வரும் கவியின் கருத்து வருமாறு :

"அந்தப் புனிதவதியார் ஆராய்ந்து அமைத்த சீர் களைப் பெற்ற திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திரு அந்தாதி என்னும் பிரபந்தங்களைத் தொடங்கிப்பாடி நிறைவேற்றியருளி தம்மிடம் அமைந்த பெருமையைப் பெற்று விளங்கும் உணர்ச்சி பொங்கி எழ வித்யுன்மாலி, தாரகாட்சன், வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்குரிய பறக்கும் கோட்டைகளாகிய மதில்கள் ஆகிய மூன்று புரங் களையும் முன்காலத்தில் சினம் மூண்டு எரித்தவராகிய கைலாசபதியார் எழுந்தருளியிருந்த பெருமையைப் பெற்று விளங்கும் வெள்ளிமலையாகிய கைலை மலையை அடைவதற்காக வாய்ப்பாக அமைந்த கைலாசபதியார் வழங்கிய பெரிய திருவருள் முன்னால் மிகுதியாக உண்டாக யாவரும் வழிபாடு புரியும் வழியில் உள்ள படிகளில் ஏறி அந்தப் புனிதவதியார் கைலாச மலையின் உச்சிக்கு வந்து சேர்ந்தார். பாடல் வருமாறு:

  • ஆய்க்தசீர் இரட்டை மாலை, அக்தாதி எடுத்துப் பாடி ஏய்ந்தபே ருணர்வு பொங்க

எயிலொரு மூன்றும் முன்னாள்